states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காற்றின் தரம் குறித்தான தரவுகளை ஆய்வு செய்யும் “ரெஸ்பைரர் லிவிங் சயின்சஸ் அண்ட் க்ளைமேட் ட்ரெண்ட்ஸ்” என்ற  அமைப்பின் அறிக்கையின்படி மிசோரம் மாநிலத்தின் ஐஸ்வால் நகரம் கன மீட்டருக்கு 11 மைக்ரோ கிராம் என்றளவில் தூய காற்றின் தரத்தை பெற்றுள்ளது. கர்நாடக மாநிலத்தின் சிக்மகளூரு  நகரம் கன மீட்டருக்கு 17.6 மைக்ரோ  கிராம் என்றளவிலும், ஹரியானாவில் உள்ள மண்டிகேரா நகரம் கன மீட்டருக்கு 17.7 மைக்ரோ  கிராம் என்றளவிலும் காற்றின் தர அளவைப் பெற்றுள்ளன. கர்நாடக மாநிலத்தின் சாமராஜ நகர்,  மடிகேரி, விஜயபுரா, ராய்ச்சூர், சிவமோகா, கடக்,  மைசூரு ஆகிய 6 பகுதிகளும் டாப் 10-இல் இடம்  பிடித்துள்ளன.

கொலை முயற்சி வழக்கில், லட்சத்தீவு  எம்.பி. முகமது பைசலின் மேல் முறையீட்டு மனுவை கேரள உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மக்களவை செய லகம் அவரை இரண்டாவது முறையாக எம்.பி.,  பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்தது.

சிக்கிம் மாநிலம் டீஸ்டா ஆற்றில் ஏற்பட்ட  வெள்ளப் பெருக்கிற்கு 14 பேர் உயிரிழந்த னர். 23 ராணுவ வீரர்கள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், 23 ராணுவ வீரர்கள் உட்பட 102 பேரை காணவில்லை என சிக்கிம்  மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டீஸ்டா ஆற்று வெள்ளமே கடும் பாதிப்பை ஏற் படுத்தியுள்ள நிலையில், சங்தங் பகுதியில் உள்ள ஏரியும் வேகமாக நிரம்பி வருவதால் நிலைமை மோசமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் உள்ள  அரசு மருத்துவமனையில் குறுகிய காலத் தில் குழந்தைகள் உள்பட 38 பேர் உயிரிழந்த விவ காரத்தில் மருத்துவமனையின் டீன் ஷியாம்ராவ் வகோடே மீது கொலை வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

சட்டவிரோதமாக விளம்பர பலகைகள், கட்  அவுட்கள் வைப்பதை தடுக்க எடுத்த நடவ டிக்கைகள் என்ன? என்பது குறித்து விரிவான பதில்மனு தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அர சுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் சென்ற பயணிகள் ரயி லில் பொம்மை துப்பாக்கியை வைத்து பயணி களை அச்சுறுத்திய கேரள இளைஞர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.