states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்கத் தலைவர்கள் சில பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். வடகொரியாவை மிரட்டும் வகையில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், தென் கொரியாவுக்கு சென்றதோடு வடகொரியாவுக்கு எதிராகப் பேசினார். அவர் கிளம்பிய ஒன்பது நிமிடங்களுக்குள், பதிலடி கொடுக்கும் வகையில் இரண்டு சிறு தொலைவு இலக்கு கொண்ட ஏவுகணைகளை ஏவி வட கொரியா சோதனை செய்துள்ளது.

ஈரானுடனான நட்புறவை விரிவாக்குவதில் உறுதியாக இருக்கிறோம் என்று ஜப்பானின் வெளியுறவுத்துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாசி உறுதி அளித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார மற்றும் எரிபொருள் ரீதியான ஒத்துழைப்பை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஹயாசி, ஈரானுடனான உறவுக்கு ஜப்பான் பெரும் முக்கியத்துவம் அளிப்பதாகவும் குறிப்பிட்டார். ஜப்பான் வந்துள்ள ஈரானின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் ஜாவத் ஓய்ஜியைச் சந்தித்தபோது அவரிடம் இவ்வாறு தெரிவித்தார்.

பொது வாக்கெடுப்பு நடந்து முடிந்த கெர்சோன் மற்றும் ஜபோரிஸ்சியா ஆகிய இரண்டு பகுதிகளையும் ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்வதற்கான ஆணைகளை ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் இருக்கும் அனைத்துப் பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வரையில் தங்கள் சிறப்பு ராணுவ நடவடிக்கை தொடரும் என்று ரஷ்யா அறிவித்திருக்கிறது.