states

img

உயிரி தொழில்நுட்ப கல்வி, ஆராய்ச்சி: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தங்கள்

சென்னை, ஜூலை 6- உயிரி தொழில்நுட்ப கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்திட தமிழ்நாட்டின் பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் டைசல் நிறுவனத்திற்கும் இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் , டைடல் பூங்காவுடன் இணை ந்து, டைசல் உயிரி தொழில்நுட்ப பூங்கா  அமைத்துள்ளது. இப்பூங்காவில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன மும், ஒன்றிய அரசின் உயிரி தொழில் நுட்பத் துறையும் இணைந்து, உயிரி தொழில்நுட்ப முதன்மை கருவியாக்க மையத்தை அமைத்துள்ளது.

சென்னையிலுள்ள கிரசண்ட் இன்னோவேசன் மற்றும் இன்குபேசன்  கவுன்சில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழ கத்தின் கால்நடை இன்குபேசன் மையம், வேல்டெக் ரங்கராஜன் டாக்டர்  சகுந்தலா ஆர்.டி. இன்ஸ்டிடியூட் ஆப்  சயின்ஸ் டெக்னாலஜி மற்றும் வேல்டெக் டெக்னாலஜி பிசினஸ் இன்கு பேட்டர், அசோசியேசன் ஃபார் பயோ இன்ஸ்பையர்ட் லீடர்ஸ் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான தொழில்நுட்ப வணிக இன்குபேசன் மையம். சாஸ்தரா டிபிஐ மற்றும் விஐடி டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர் ஆகிய நிறுவனங்களுடன் டைசல்  நிறுவனம் இன்று காலை முதல்வர்  முன்னிலையில் தலைமைசெயல கத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டன. மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா நிலை-2 இல் 350 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள் தொழிற் பூங்காவில், முதல் நில ஒதுக்கீட்டு ஆணையை ஜெனியுன் பயோ சிஸ்டம்ஸ் பிரைவேட்  லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (தொழில்நுட்பம்) டாக்டர் மு. தனசேகரனிடம் முதலமைச்சர் வழங்கினார்.

பயிற்சி மையங்கள்

தொடர்ந்து, சிறுசேரி சிப்காட் தகவல் தொழில் நுட்பப் பூங்கா நிறுவ னங்கள் மற்றும் இதர ஏற்றுமதி யாளர்கள் பயன்பெறும் வகையில் 85,000 சதுர அடி பரப்பில் ரூ. 35 கோடி  செலவில்  கட்டப்பட்டுள்ள மூன்று கருத்தரங்கு கூடங்கள் மற்றும் இரண்டு  பயிற்சி மையங்கள் உள்ளிட்ட வணிக வசதிகள் மையத்தையும் திறந்து வைத்தார்.

தங்கும் விடுதிகள்

திருப்பூர் மாவட்டத்தில் தொழிற் சாலைகளில் பணிபுரியும் பணியா ளர்கள் 400 பேர் வரைக்கும் தங்கு வதற்காக நெருப்பெரிச்சல் கிராமத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் இரண்டு தளங்களுடன் 41,082 சதுர அடி பரப் பளவில் ரூ. 10.19 கோடியில் கட்டப் பட்டுள்ள தங்கும் விடுதிக் கட்டி டத்தையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தீயணைப்பு நிலையங்கள்

இருங்காட்டுக்கோட்டையிலுள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் 3555 சதுர  அடி கட்டுமானப் பரப்பில் சுற்றுச் சுவ ருடன் தொழில் பூங்காவிற்குள்ளும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தேவைக்கேற்ப மீட்புப் பணி சேவை மேற்கொள்ள ரூ. 1.32 கோடி  செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் என  மொத்தம் ரூ. 48 கோடியே 7 லட்சம்  செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங் களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.


 

;