ஜிடிபி வளர்ச்சி 6.3% ஆக இருக்கும்!
புதுதில்லி, அக். 4 - நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவிகித மாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது. மேலும், ரூபாயின் மதிப்பு ஏற்ற இறக்கத்துடன் தொடரும் என்று தெரி வித்துள்ள உலக வங்கி, கல்வித் திறன் சார்ந்த பணிகளிலும், உடல் உழைப்பு சார்ந்த பணிகளிலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது சவா லாக உள்ளது. எனவே, இது தொடர் பாக புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டியது அவசியம். இந்தியாவில் நிதிச் சேவைகள் துறை சில சவால் களை எதிர்கொண்டுள்ளது. வங்கி களின் நிதி நிலையும், பெரு நிறுவனங் களின் கடன் விகிதமும் மேம்பட வேண் டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
பெரியாற்றில் நீர் திறப்பு : உயரும் வைகை அணை நீர்மட்டம்
தேனி, அக்.4- முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட் களாக பரவலாக மழை பெய்து வரு கிறது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. புதன்கிழமை காலை நில வரப்படி முல்லைப்பெரியாறு அணை யின் நீர்மட்டம் 121.80 அடியாக உள்ளது. 1665 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 1200 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணை யின் நீர்மட்டம் 49.54 அடியாக உள் ளது. அணைக்கு 915 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக் காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.60 அடி, நீர்வரத்து 11 கன அடி, சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 90.20 அடியாக உள்ளது.
நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை சம்மன்
புதுதில்லி, அக். 4 - இந்தியா, துபாய், பாகிஸ்தானில் சவுரப் சந்திராகர் என்பவர் சூதாட்ட மொபைல் ஆப் நிறுவனம் வைத்து வணிகம் மேற்கொண்டு வருகிறார். இவர் சமீபத்தில் ரூ.200 கோடி செலவில் ஆடம்பரமாக திருமணம்செய்தார். சவுரப் சந்திராகர் திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் டைகர் ஷெராப், சன்னி லியோன், நேகா கக்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இந்நிலையில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் இந்தியாவிலிருந்து உற வினர்களை அழைத்துச் செல்ல விமானக் கட்டணம் மட்டும் 42 கோடி செலவிடப்பட்டதாகவும், திரு மணத்திற்கான பணம் ஹவாலா முறை யில் செலவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகிய நிலையில், சவுரப் சந்திராகரின் சூதாட்ட மொபைல் ஆப் நிறுவனம் அமலாக்கத்துறை கண் காணிப்பில் வைக்கப்பட்டு, மும்பை, தில்லி என பல்வேறு இடங்களில் அம லாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. அதைத்தொடர்ந்து, சவுரப் சந்திராகரின் சூதாட்ட மொபைல் ஆப் விளம்பரத்தில் நடித்துள்ள நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அக்.6 அன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனில் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
வறட்சி நிவாரணம் 4,000 கோடி ரூபாய் கேட்கும் கர்நாடக அரசு
பருவமழை பொய்த்ததால் கர்நாடகா மாநிலத்தின் பெலகாவி, விஜயபுரா, பாகல்கோட், தார் வாட், சித்ர துர்கா, காவேரி, கடக், கொப்பல், விஜயநகரா, சிக்கபல்லாபுரா, துமகுரு, தாவண கெரே ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட 195 தாலுகாக் கள் கடும் வறட்சியில் சிக்கியுள்ளதாகவும், ரூ.28,000 கோடிக்கும் அதிகமாக பயிர் இழப்பை சந்தித்து இருப்பதாகவும் அம்மாநில அரசு மதிப்பீடு செய் துள்ளது. மேலும் 4,000 கோடி ரூபாயை இழப்பீடாக தேசிய பேரிடர் நிவாரண நிதியின்(என்டிஆர்எப்) திட்டத்தின் கீழ் வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கர்நாடகா அரசு கடிதம் எழுதியுள்ளது. மத்தியக்குழு இன்று ஆய்வு கர்நாடகா அரசு கடிதம் எழுதியுள்ள நிலையில், பயிர் சேதத்தை மதிப்பிடுவதற்காக மத்தியக்குழு வியா ழனன்று கர்நாடகா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற் கொள்கிறது. ஐந்து நாட்களுக்கு 12 மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளும் மத்தியக் குழு, பின் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து ஆலோ சனை மேற்கொள்ளும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
“5 நாட்களில் 1327 பேர் உறுப்பு தானம்”
சென்னை,அக்.4- உடல் உறுப்பு தான தினமான செப்.23ஆம் தேதியில் இருந்து 27 ஆம் தேதி வரை 5 நாட்களில் தமிழ்நாட்டில் 1,327 பேர் தங்கள் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க பதிவு செய்துள்ள னர். இந்த தகவலை உடல் உறுப்பு மாற்று ஆணையம் தெரிவித்துள்ளது. செப்.23இல் உறுப்பு தானம் செய் வோருக்கு இனி அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் பெயரில் கடன் பெற்று தனியார் நிறுவனம் மோசடி
சென்னை, அக்.4- சென்னையில் 3 மாத ‘ஆன்லைன் படிப்பு’ படித்தால் வேலை வாங்கி தருவதாக கூறி மாணவர்களின் பெயரில் கடன் வாங்கி ஏமாற்றிய தனியார் நிறுவனம் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- 3 மாத ஆன்லைன் படிப்பு முடித்தால் வேலை வாங்கி தருவதாக கூறி தங்களி டம் கட்டணத்தையும் பெற்றுவிட்டு முறையாக பாடம் நடத்தவில்லை. தாங்கள் வழங்கிய ஆவணங்களை கொண்டு தங்கள் பெயரிலேயே தனியார் நிதி நிறுவனத்தில் ‘ஸ்கில் லிங்’ நிறுவனம் கடன் பெற்றுள்ளனர். அந்தக் கடனை திருப்பி செலுத்த கூறி நிறுவனம் மிரட்டுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு
சிதம்பரம்,அக்.4- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அக்.4 அன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி செவ்வாய்க் கிழமை (அக்.3) வந்த அவர் அண்ணா மலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கினார். புதன்கிழமை (அக்.4) பல்கலைக் கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரை யாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தக்காளி விலை படுவீழ்ச்சி
தருமபுரி,அக்.4- தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாகவே தக்காளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது வேகமாக சரிந்துள்ளது. விவசாயிகளிடம் 10 முதல் 15 ரூபாய்க்கு கொள்முதல் செய்த மொத்த வியாபாரிகள் தற்போது, 3 முதல் 5 ரூபாய்க்குதான் கொள்முதல் செய்கின்றனர். உழவர் சந்தையில் ரூ. 8 விற்பனையானது. இதனால், கிருஷ்ண கிரி, தருமபுரி மாவட்டங்களில் விவசாயி கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
சூறாவளிக்காற்றால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
தூத்துக்குடி, அக்.4- தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்ச ரிக்கை விடுத்தது. இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 270 விசைப்படகுகள் மூலம் வழக்கமாக செல்லக்கூடிய மீனவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள மீனவர்கள் அக்டோபர் 4 ஆம் தேதி 4-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வில்லை. திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகர், ஆலந்தலை, மனப்பாடு ஆகிய பகுதிகளை சேர்ந்த நாட்டு படகு மீனவர்களும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.இதனால் சுமார் 700 படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சாதிவாரி கணக்கெடுப்பு: உயர்நீதிமன்றம் கைவிரிப்பு
சென்னை, அக். 4- சாதி வாரியாக மக்கள் தொகை கணக் கெடுப்பு நடத்தும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. தமிழ்நாடு சட்ட பாதுகாப்பு இயக்கம் சார்பில், அதன் தலைவர் எம்.முனுசாமி தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு முழு வதும் 3,000க்கும் மேற்பட்ட சாதிகள் உள்ள தாக தெரிவித்துள்ளார். குறிப்பாக இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் அடிப்படை வசதிகள் இல்லா மல் பொருளாதார ரீதியில் பின்தங்கி யவர்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சாதி வாரி மக்கள் தொகை கணக் கெடுப்பு நடத்தப்படுவதன் மூலம், அரசின் திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பு அனை வருக்கும் சமமாக சென்றடையும் என்றும், மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் தெரிவித்துள்ளார். சாதிவாரி மக்கள்தொகை கணக் கெடுப்பு நடத்தக்கோரி தமிழ்நாடு அரசிடம் அளித்த மனு மீது உரிய நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரி யிருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, எந்த அடிப்படை யில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது அரசின் தனிப்பட்ட அதிகார வரம்புக்கு உட்பட்டது என்பதால் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுத்து விட்டது. சாதி வாரியாக மக்கள் தொகை கணக் கெடுப்பு நடத்த கோரி அரசுக்கு மனு அளித்துள்ள நிலையில், இது சம்பந்தமாக அரசை அணுகும்படி மனுதாரருக்கு அறி வுறுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.