பொன்னேரி, மார்ச் 13- பொன்னேரி அருகே தனியார் சிலர் ஆக்கிரமித்து இருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள 4 ஏக்கர் நிலத்தை பொன்னேரி வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர். திருவள்ளூர் அதிகாரிகளிடம் புகார் பொன்னேரி அடுத்த திருப் பாலைவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிறுளப் பாக்கம் என்ற கிராமம் பழவேற் காடு ஏரிக்கரை அருகே உள்ளது. இக்கிராமத்திற்கு செல்லும் வண்டி பாட்டை அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து இறால் பண்ணைகள் அமைத்திருந்ததாக தெரிகிறது. இந்த இறால் பண்ணை யின் இறால் கழிவுகள் மற்றும் ரசாயன கழிவுநீர் பழவேற்காடு ஏரி யில் கலந்து மீன் இனங்கள் அழிந்து வருவதாக கூறி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம், மீனவ நலத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உட்பட பல்வேறு துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அரசு நிலம் மீட்பு இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில், பொன்னேரி வருவாய்த்துறை அதிகாரிகள், நில அளவையர்கள் மூலம் அரசு நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சிறுளப் பாக்கம் கிராமத்திற்கு செல்லும் வண்டி பாட்டை என்ற வகைப்பாடு கொண்ட அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து அதில் இறால் பண்ணைகள் அமைத்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து வரு வாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி ரூ.2 கோடி மதிப்புள்ள 4 ஏக்கர் நிலத்தை மீட்டனர்.