ஹவானா, ஏப்.15- இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கென்யாவில் கடத்தப்பட்ட இரண்டு கியூப மருத்துவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று கியூப ஜனாதிபதி மிகேல் டியாஸ் கானல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் ஏராளமான நாடு களில் கியூபாவின் மருத்துவர்கள் தன்னார் வத்துடன் மக்களுக்கு சிகிச்சை அளித்து வரு கிறார்கள். கியூபாவின் மருத்துவத்துறை அபார வளர்ச்சி அடைந்துள்ளதை இந்த தன் னார்வப்பணி காட்டுகிறது. எந்த நாட்டில் இயற்கைப் பேரிடர் நேர்ந்தாலும், பேரிடர் மேலாண்மைப்பணியாளர்களோடு கியூப மருத்துவர்கள் இணைந்து கொள்வது வழக்கமாகவே மாறிவிட்டது. இதுவரையில் 103 நாடுகளில் கியூபாவின் மருத்துவப் பணி நடைபெற்றுள்ளது. ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கியூ பாவைச் சேர்ந்த ஏராளமான மருத்துவர்கள் அந்நாட்டு மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர்களில் சிறப்பு பொது மருத்துவர்களான லேண்டி ரோட்ரிகஸ் மற்றும் அசெல் ஹெரிரா ஆகிய இருவரும் ஏப்ரல் 12, 2019 அன்று கடத்தப்பட்டார்கள். கென்யாவில் இயங்கி வரும் அல் ஷபாப் என்ற அமைப்பு இந்தக் கடத்தல் வேலையைச் செய்தது என்பது தெரிய வந்தது. பல்வேறு தொடர்புகள் மூலமாக இந்த இருவரையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.
இத்தகைய முயற்சிகள் தொடர்பாக கியூபாவின் ஜனாதிபதி மிகேல் டியாஸ் கானெல் தெரிவித்துள்ளார். இந்த இருவ ரையும் மருத்துவத் தூதர்கள் என்று அழைக் கும் கானெல், கென்ய மக்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தித் தரு வதற்கான இரு தரப்பு உடன்பாட்டை நிறை வேற்றும் பொறுப்பை இந்த இருவரும் ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்றும், நாட்டு மக்களின் நலன்களுக்காக இருவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். கடத்தப்பட்டதற்குப் பிறகு, அவர்களைப் பற்றிய விபரங்கள் எதுவும் தெரியவில்லை. ஆனால், அல் ஷபாப் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மத்திய அல்லது தெற்கு சோமா லியா பகுதிகளுக்குள் அவர்கள் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படு கிறது. கடத்தப்பட்ட அன்று இவர்களை அழைத்துச் சென்று கொண்டிருந்த காவல் துறை அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். கடத்தல்காரர்களோடு தொடர்பு வைத்தி ருந்த குற்றச்சாட்டில் ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.