states

தீக்கதிர் விரைவு செய்திகள்

நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட சிறுமி பலி

நாமக்கல் மாவட்டம் சந்தைப்  பேட்டை புதூர் பழனிசாமி தெருவைச் சேர்ந்தவர் சுஜாதா.  இவரது மகள் கலையரசி (14). 9-ஆம்  வகுப்பு படிக்கும் இவர் சனியன்று மாலை  தாய் சுஜாதா, கலையரசியின் மாமா, அத்தை, தம்பி உள் ளட்டோர் பரமத்தி  சாலையில் உள்ள ஒரு தனியார் உணவ கத்தில் சவர்மா (லெபனான் நாட்டின்  அசைவ உணவு) உணவை பார்சல்  வாங்கி வந்து வீட்டில் வைத்து சாப்பிட்ட னர். சவர்மா சாப்பிட்ட பின் மாணவி கலை யரசிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட நாமக்கல்லில் உள்ள ஒரு தனி யார் மருத்துவமனையில் கலையரசி அனுமதிக்கப்பட்டார்.  இந்நிலையில் திங்களன்று காலை  கலையரசி சிகிச்சை பலனின்றி பரிதாப மாக உயிரிழந்தார். உயிரிழந்த சிறுமியின்  தம்பி பூபதி (12), உறவினர்கள் சுனோஜ், கவிதா ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு

கலையரசி சவர்மா சாப்பிட்ட அதே  உணவகத்தில் நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரியில் முதலாம் ஆண்டு விடுதி யில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகள்  பலர் சவர்மா, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவு வகைகளை சாப்பிட்டனர். ஞாயி றன்று அதிகாலையில் திடீரென 6 மாணவி கள், 7 மாணவர்கள் என மொத்தம் 13  பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் மற்றும் காய்ச்சல் போன்ற உடல்  நல பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து  அவர்கள் அனைவரும் நாமக்கல் மாவட்ட  தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்  சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  இந்த 2 சம்பவங்களால் சம்பந்தப் பட்ட தனியார் உணவகத்தை நேரில்  ஆய்வு செய்த நாமக்கல் மாவட்ட ஆட்சி யர் உமா, கடைக்கு நோட்டீஸ் வழங்கி  ‘சீல்’ வைக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

புதிய கட்டடத்திற்காவது  மோடி வரவேண்டும்

பிரதமர் அரிதாகவே நாடாளு மன்றத்திற்கு வருவார். அதை ஒரு நிகழ்வு போல மாற்றிவிட்டு சென்று விடுவார். அவ்வாறு இல்லாமல் புதிய நாடாளுமன்றத்துக்கு செல்லும் போதாவது உங்கள் அரசியல் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். பிரதமர் மோடி  வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மேற்  கொள்கிறார். ஆனால், மணிப்பூருக்கு செல்ல மறுக்கிறார். இந்தியா சுதந்திரம்  அடைந்த பிறகு, பிரிட்டிஷ்காரர்கள் நம்மை  குறைத்து மதிப்பிட்டார்கள். ஆனால்,  அவர்களின் எண்ணம் தவறானது என்  பதை நாம் நிரூபித்து உள்ளோம். ஜன நாயகத்தை நாம் வலுப்படுத்தியதோடு, பாதுகாத்துள்ளோம். 70 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் என்று நீங்கள் (பாஜக)  கேட்கிறீர்கள். இதைத்தான் நாங்கள் (காங்கிரஸ்) செய்தோம்.

பதற்றத்தை ஏற்படுத்திய  இந்து முன்னணி-பாஜக கும்பல்

தென்காசி மாவட்டம் தெற்கு பஜாரில் தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சி நடத்தப்  பட்டது. அப்போது இந்து முன்னணி மற்  றும் பாஜக கும்பல் அதே இடத்தில் நடுரோட்டில்  பிள்ளையார் சிலையை வைத்து பதற்றத்தை ஏற் படுத்தி பிரச்சனை செய்தனர்.  இதுகுறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் உ.முத்துப் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள் வந்து பிள்ளையார் சிலை யை அகற்ற நடவடிக்கையை எடுத்தனர். இதுபோல  பல இடங்களில் பிரச்சனையை உருவாக்குவதற்காக  இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் திட்டமிட்டு சில  வேலைகளை செய்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின்  தலையீட்டால் உடனுக்குடன் காவல்துறை கவ னத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, பதற்றம் மற்றும் பிரச்சனை ஏற்படுவது தடுக்கப்பட்டது.

இன்று காலாண்டு தேர்வு தொடக்கம்

சென்னை,செப். 18- தமிழ்நாடு அரசு பாடத் திட்டத்தில் படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செவ்வாய்க்கிழமை (செப்.19) தொடங்குகிறது. இந்த தேர்வுகள் வருகிற 27 ஆம் தேதி வரை நடைபெறு கிறது. கடந்த 15 ஆம் தேதி 11, 12 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம்  தேதி வரை காலாண்டு தேர்வு விடு முறை விடப்படுகிறது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான ஒரே வினாத்தாள் முறை மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கல்வி அலுவல கங்கள் மூலம் தயாரிக்கப் பட்டு வந்த  வினாத்தாள் முறையில் மாணவர்களை மதிப்பீடு செய்வதில் வேறுபாடு ஏற்படு கிறது. ஆனால் அனைத்து பள்ளி மாண வர்களும் ஒரே மாதிரியான வினாத் தாள்கள் பின்பற்றி தேர்வு எழுதினால்  ஏற்றத்தாழ்வு ஏற்படாது என்று கருதி  மீண்டும் பொதுவான வினாத்தாள் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட் டுள்ளது. அரசு தேர்வுத் துறையால் தயாரிக் கப்படும் இந்த வினாத்தாள்களை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரி கள் பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக  வைத்து தேர்வு நாளில் விநியோகிக்க வேண்டும். தேர்வுக்கு  முன்னதாக வினாத்தாள் வெளியா னால் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரி கள், தொடர்புடைய ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

சாதி வாரிக் கணக்கெடுப்புக்காக  கூட்டணி கட்சிகள் கூட்டம்: கே.எஸ்.அழகிரி

சென்னை, செப்.18- தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு வலியுறுத்தி காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகளுடன் கூட்டம் நடத்த உள்ளது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:- கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உயர் வகுப்பினருக்கு மட்டும் கிடைத்து வந்த நிலையில் எல்லா தரப்பு மக்களுக்கும் கிடைக்க  வேண்டும் என்று சுதந்திரத்திற்கு முன்பே காந்தி வலியுறுத்தினார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு காமராஜர்,  பெரியார் ஆகியோர் அதற்கான முயற்சி களை முன்னெடுத்தனர். இது பற்றி அப்போ தைய பிரதமர் நேருவிடம் வலியுறுத்தி னார்கள். நியாயத்தை உணர்ந்து நேருவும் அதை ஏற்றுக் கொண்டார். ஆனால் அதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் தேவைப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை நேரு கொண்டு வந்தார். இதுவே இந்திய அரசியல் சட்டத்தில் நடந்த  முதல் திருத்தம். ஆனால் சாதி வாரியாக சரியான கணக்குகள் இல்லை. எனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கி றது. இது நடத்தப்பட்டால் ஒவ்வொரு சமூகத்துக்கும் ஏற்ப கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சரியான இட ஒதுக்கீடு கிடைக்கும்.  எந்த சமூகத்திற்கும் பாரபட்சம் இருக்காது. இதை வலியுறுத்தி மற்ற கட்சிகளையும் இணைத்து ஒரு கூட்டம் நடத்துவதற்கு காங்கிரஸ் ஓ.பி.சி. அணியின் தலைவர் டி.ஏ.நவீன் ஏற்பாடு செய்து வருகிறார். இந்த கூட்டம் வருகிற 25 ஆம் தேதி (திங்கட்கிழமை) காமராஜர் அரங்கில் நடக்கிறது. கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

விஜயலட்சுமி விவகாரம்:  காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்

சென்னை, செப். 18- நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜ ரானார். நடிகை விஜயலட்சுமி, தன்னை சீமான் மதுரை கோயிலில் வைத்து திரும ணம் செய்ததாகவும், பல முறை கருத்தரித்து, அதை  சீமான் கலைத்து விட்டதாக வும் குற்றம்சாட்டி புகார்  அளித்தார். அதன்பேரில், சீமானுக்கு சென்னை வளசர வாக்கம் காவல்துறையினர் இரண்டு முறை அழைப் பாணை (சம்மன்) அனுப்பினர். இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமை சீமான் மீது அளிக்கப்பட்ட புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை விஜயலட்சுமி தெரி வித்தார். அப்போது பேசிய விஜயலட்சுமி, “சீமான் மீது கொடுத்த புகாரை பெற்றுக் கொண்டு பெங்களூரு செல்ல உள்ளேன். காவல்துறையில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் என்னை மன  உளைச்சலுக்கு ஆளாக்கி னார். சீமானிடம் பேசி தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளேன். இந்த வழக்கில் தொடர்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்றார். இந்த நிலையில், காவல் துறையினர் அழைப் பாணையை ஏற்று வளசர வாக்கம் காவல் நிலை யத்தில் விசாரணைக்காக சீமான் திங்கட்கிழமை (செப்.18)ஆஜரானார். அவரது மனைவி, வழக்கறி ஞர்கள் உட்பட 5 பேர்  மட்டுமே காவல் நிலையத் துக்குள் அனுமதிக்கப்பட்ட னர்.

பைக் சாகசம்: யூடியூபர் வாசன் மீது வழக்கு

சென்னை, செப்.18- சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ‘பைக்’ சாகசத்தில் ஈடுபட்டு விபத்தில் சிக்கிய பிரபல யூடியூப் டிடிஎஃப் வாசன் மீது, மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்குவது, பிற ருடைய பாதுகாப்புக்கு குந்தகம்  விளைவிப்பது என இரு பிரிவு களின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். யூடியூபில் பிரபல டிராவல் பிளாகராக வலம் வரும் கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசனுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரை  பின்தொடர்வோர் பெரும்பாலா னோர் இளம் தலைமுறையினர்.  கடந்த ஆண்டு இவர் தனது பிறந்தநாளை ஒட்டி, தன்னைப் பின் தொடர்வோருடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். இதில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் காவல்துறை எச்சரிக்கும் நிலைக்கு சென்றது. அவரது அழைப்பை ஏற்று வந்த ஆயிரக்கணக்கானோரில் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். அவரது இந்த ‘மாஸ்’சந்திப்பு குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்களாகவும் எழுந்தன.  அவ்வப்போது சாலையில் பயணம் செய்து சர்ச்சையில் சிக்கும் அவர் மீது வழக்கு தொடர்ந்து, எச்சரித்து அனுப்பு வது காவல்துறையின் வழக்கம்.  கடந்த ஜூன் மாதம் அவரது  பிறந்தநாள் அன்று அவர் நடிக்கும் ‘மஞ்சள் வீரன்’ படத்தின்  அறிவிப்பு வெளியாகி இருந்தது.  மணிக்கு 299 கி.மீ வேகத்தில்  படப்பிடிப்பு என அறிவிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், யூடியூப் டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலு செட்டி சத்திரம் அருகே இருசக்கர  வாகனத்தில் சென்றபோது சாகசம் செய்ய முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.  இதில் அவரது கை எலும்பு முறிந்துள்ளது. அது தவிர உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான ஒரு வீடியோவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு உள்ளது.  காஞ்சிபுரம் மருத்துவமனை யில் அளிக்கப்பட்டு பின்னர், அவர் சென்னையில் உள்ள தனி யார் மருத்துவமனைக்கு மேல்  சிகிச்சைக்காக மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாலு செட்டி சத்திரம் காவல் துறையி னர், டிடிஎஃப் வாசன் மீது, மனித  உயிருக்கு ஆபத்து உண்டாக்கு வது, பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது என  இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.