சென்னை, ஆக. 1- தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டு களில் 1,705 பேர் 786 இதயம், 3,046 சிறுநீரகங்கள் என 3,832 உறுப்புகளை தானம் செய்திருக்கிறார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- கலைஞர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் 2008 ஆம் ஆண்டு, செப்டம்பர் 5 ஆம் தேதி மூளைச் சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர் 2015 ஆம் ஆண்டில் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் உருவாக்கப் பட்டது. தமிழ்நாட்டில், ஏற்கெனவே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது.
மேலும் திருநெல்வேலி மதுரை, கோவை மருத்துவக் கல்லூரி மருத்து வமனைகளிலும் உரிமம் வழங்கப் பட்டது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்படவுள்ளது. இந்த ஆணையம் தொடங்கப்பட்ட 15 ஆண்டுகளில் மொத்த உறுப்பு தானம் செய்தவர்கள் 1,705 பேர். இதில் இதயம் 786, நுரையீரல் 801, கல்லீரல் 1565, சிறுநீரகம் 3046, கணையம் 37, சிறுகுடல் 6, வயிறு 2, கைகள் 4 என உறுப்புகள் தானமாக பெறப்பட்டு 6247 பேருக்கு பொருத் தப்பட்டுள்ளது. இது தவிர 2,500 கண்களும் தானமாக பெறப்பட்டு உள்ளது. தமிழ் நாட்டில் மட்டும் தான் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ. 22 லட்சம் வரையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது . இந்த திட்டத்தின் மூலம் 2014 முதல் தற்போது வரை மட்டும் 370 நோயாளிகள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு பயனடைந்துள்ளனர். நோயாளிகளின் பதிவு மற்றும் உடல் உறுப்புகளை ஒதுக்கீடு செய்வதற்காக விடியல் என்ற தானியங்கி இணையதளம் மற்றும் செயலி இந்தியாவிலேயே முதன் முறை யாக 13.8.2021 அன்று தமிழ்நாடு அரசு தொடங்கி வைத்தது. இந்த செயலியால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வெளிப்படை யாகவும் மூப்பின் அடிப்படையில் நோயாளிகளுக்கு உறுப்பு ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.