இஸ்ரேலில் இருந்து மேலும் 235 இந்தியர்கள் மீட்பு!
புதுதில்லி, அக். 14 - இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 8-ஆவது நாளாக யுத்தம் தொடரும் நிலையில், இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ‘ஆபரேசன் அஜய்’ திட்டத்தை ஒன்றிய அரசு அறி வித்தது. இதன்படி வெள்ளியன்று முதற்கட்டமாக 212 இந்தி யர்கள் விமானம் மூலம் தில்லி வந்தனர். இந்நிலையில் சனிக்கிழமையன்று இரண்டாவது குழுவில் மேலும் 235 இந்தி யர்கள் தில்லி திரும்பியுள்ளனர்.
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் சேவை துவங்கியது
நாகப்பட்டினம், அக்.14- நாகப்பட்டினம் - இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்தை, பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் சனிக்கிழமையன்று துவக்கி வைத்தார். நாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், தமிழக அமைச்சர்கள் எ.வ. வேலு, ரகுபதி ஆகியோர் பங்கேற்ற னர். பயணக் கட்டணம் 18 சதவிகித ஜிஎஸ்டி-யுடன் ரூ. 7 ஆயி ரத்து 670 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரூ.1.40 கோடி மோசடி: பாஜக மாநில நிர்வாகி உள்பட 4 பேர் கைது
சென்னை,அக்.14- ரூ.70 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.1.40 கோடி மோசடி செய்த பா.ஜ.க. மாநில நிர்வாகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இமாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரிந்தர் பால் சிங். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவல கத்தில் கொடுத்த புகார் மனுவில் , என்னுடைய தொழில் நிறுவன வளர்ச்சிக்கு ரூ.70 கோடி கடன் பெற்றுத் தருவதாக வும், அதற்கு பதிவு கட்டணம் மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் என ரூ.1.40 கோடி வாங்கி, ஒரு கும்பல் மோசடி செய்துவிட்டது. ரூ.70 கோடிக்கான போலி வரை வோலையை காட்டி என்னை மோசம் செய்து விட்டனர். அந்த மோசடி கும்பல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, என்னிடம் பறித்த ரூ.1.40 கோடி பணத்தை மீட்டுத் தரும்படி அந்த மனுவில் அவர் கோரியிருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறை யினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ராஜசேகர் (65), சென்னை போரூர், ஆலப்பாக்கம் ரஜிதா (36), கே.கே.நகரைச் சேர்ந்த ராமு (36), வளசரவாக்கம் தசரதன் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 1 லட்சம் ரொக்கப்பணம், 2 கார் மற்றும் போலியான ஆவணங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட வர் ராஜசேகர். இவர் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட்டதாக கூறப்படுகிறது. தற்போது பாஜக மாநில விவசாய அணி நிர்வாகியாக இருப்ப தாக காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள் ளது.
பணிப்பெண்ணுக்கு விஎச்பி தலைவர் பாலியல் துன்புறுத்தல்
திருச்சிராப்பள்ளி, அக். 14 - திருச்சிராப்பள்ளி மாவட்டம் துவரங்குறிச்சியைச் சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் என்.ஆர்.என். பாண்டியன். இவர், தனது வீட்டில் வேலை செய்த பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததுடன், தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டிய தாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, ஐபிசி பிரிவு 354, தமிழ்நாடு பெண் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் பிரிவு 4 ஆகியவற்றின் கீழ், விஎச்பி நிர்வாகி பாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.