states

தீக்கதிர் விரைவு செய்திகள்

22 மீனவர்களை  பிடித்துச் சென்ற இலங்கை

இராமேஸ்வரம், நவ.18-  இராமநாதபுரம் மாவட்  டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் கேசி யர் மற்றும் ராஜூ ஆகியோ ருக்கு சொந்தமான இரண்டு நாட்டுப்படகுகளில் சுதாகர்,  மேரிட்டேன், சிவா, பெவின் ராஜ், அந்தோணிராஜ், திப்பி ஜோன், ரோஜன், பாஸ்கர், ஜீனோ, ரோஜன் உள்ளிட்ட 22 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில், இவர்கள் காங்கேசன் கடல் பகுதியில் எல்லைத் தாண்டி மீன்பிடித்த தாக கூறி இலங்கை கடற்படை யினர் சிறைபிடித்துள்ளனர். 

மாலத்தீவில் புதிய ஜனாதிபதி பதவியேற்றார்

புதுதில்லி, நவ.18- மாலத்தீவின் 8-ஆவது ஜனாதிபதியாக முகமது மூயிஸ் (45) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி முதாசிம் அத்னான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை  ஜனாதிபதியாக ஹுசைன் முகமது லத்தீப் பதவியேற் றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இந்திய அமைச்  சர் கிரண் ரிஜிஜு, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க,  வங்கதேச செய்தி ஒலிபரப் புத் துறை அமைச்சர் ஹசன்  மகமுத், பாகிஸ்தான் செய்தி  ஒலிபரப்புத் துறை அமைச் சர் முர்தாஜ் சோலங்கி உள் ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இஸ்ரேலிடம் இருந்து குழந்தைகளை காக்க போராட்டம் 

புதுதில்லி, நவ.18- காசாவில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் ராணுவம் அத்து மீறி தாக்குதலை நடத்தி வரு வதாலும் மின்சாரத்திற்கான எரிபொருள் இல்லாததாலும் இன்குபேட்டரில் வைக்கப் பட்டுள்ள 36 குறைமாத குழந்  தைகளை, எகிப்து மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல  உலக சுகாதார அமைப்பு  (WHO) எகிப்து அதிகாரிகளு டன் பேச்சு வார்த்தை நடத்தி  வருகிறது.

அவதூறு பிரச்சாரம் பாஜக பிரமுகர் கைது

அரியலூர், நவ.18- அரியலூர் மாவட்டம், வடுகர்பாளையம் கிராமத்  தைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். திருமானூர் கிழக்கு  ஒன்றிய பாஜக தலைவர்  பொறுப்பில் இருக்கும் இவர், தனது முகநூல் பக்கத்  தில், தமிழக முதல்வர் மற் றும் திமுக அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர்கள் குறித்து அவதூறாக பதி விட்டுள்ளார். இதுகுறித்து அரியலூர் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ்குமார் அளித்த புகாரின் பேரில், திருமா னூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து பாஜக ஒன்  றியத் தலைவர் சுரேஷ்  குமாரை கைது செய்துள்ளார்.

தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு உரிமை இல்லை 

புதுதில்லி, நவ.18- பாலஸ்தீன பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல், ஹமாஸ் குழுவிற்கு எதி ராக தற்காப்பு தாக்குதல் நடத்துகிறோம் என்று கூறு வதற்கு உரிமை இல்லை என  ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.