states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. 2022-ஆம் ஆண்டிற் கான மருத்துவம், இயற் பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், வேதியியலுக் கான நோபல் பரிசு  கரோலின் ஆர்.பெர் டோஸி (அமெரிக்கா), மோர்டன் மெல்டல் (டென்மார்க்) மற்றும் கே.பாரி ஷார்ப்லெஸ் (அமெரிக்கா) ஆகியோ ருக்கு கூட்டாக அறிவிக்க ப்பட்டுள்ளது. உயிர் இயக்கவியலில் மூலக் கூறுகள் மற்றும் பயோ  ஆர்த்தோகனல் வேதி யியலின் மேம்பாட்டுக் காக இம்மூவரும் வேதி யியலுக்கான நோபல் பரிசை பெறுகின்றனர்.
  2. சூரியனில் 2,00,000 கிலோமீட்டர் நீளமுள்ள இழை (சூரிய காந்தத் தின் நீண்ட இழை) வெடி த்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வெடிப்பு  சூரிய னின் தெற்கு அரைக்கோ ளத்தில் நிகழ்ந்துள்ளது என தகவல் வெளியாகி னாலும், வெடிப்பின் பொழுது நிகழ்ந்த சூரியப்புயல், புவி காந்தப் புயல் குறித்து திடமான எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
  3. இரண்டாம் அரை யாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5% சலு கை அளிக்கப்படும் என சென்னை மக்களுக்கு மேயர் பிரியா அறிவித்து ள்ளார்.
  4. வங்கதேசத்தில் தொழில் நுட்ப கோளாறு காரண மாக ஏற்பட்ட மின்தடை யால் 13 கோடி பேர் மின்சா ரம் இன்றி தவித்ததாக தகவல் வெளியாகியுள் ளது. நாட்டின் 80% அதிக மான இடங்கள் பாதிப் படைந்து ள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆடைத் துறை பணிகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சுமார் 10  மணி நேரம் நிறுத்தப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
  5. அருணாச்சல பிரதேசத் தில் உள்ள தவாங் பகுதி யில் இந்திய ராணு வத்தின் சீட்டா ஹெலி காப்டர் ஒன்று புதனன்று விபத்துக்குள்ளானதில் லெப்டினன்ட் கர்னல் சவுரப் யாதவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு விமானி சிகிச்சை பெற்று வரு கிறார்.
  6. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலுக்கு அருகில் உள்ள நகரமொன்றில் கல்வி நிலையத்தின் மீது குண்டுகள் வீசப்பட்டன. இந்தத் தாக்குதலில் இதுவரையில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 110 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலை மறைக்கும் வகையில், தலிபான் நிர்வாகம் குறைவான நபர்கள்தான் கொல்லப்பட்டதாக முதலில் கூறியது. தற்போது உண்மையான விபரங்கள் வரத்தொடங்கியுள்ளன.
  7. 2021-2030க்கான தேசிய சிறப்புத்திட்டம் குறித்து வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறாவது பிளீனம் விவாதித்து வருகிறது. வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு இந்த விவாதத்தை முழுமையாக நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளின் நிதி நிலை அறிக்கைகள் மற்றும் 2023 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான திட்டங்களை விவாதிக்கிறார்கள்.
  8. பாலஸ்தீன ஜனாதிபதி அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளரான நபில் அபு ருடேனே, “மேற்குக் கரையில் வசித்து வரும் பாலஸ்தீனர்களைக் கொல்வதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும். இது ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றதாகும்” என்றார். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதையும், ஒருவர் படுகாயமடைந்ததையும் சுட்டிக்காட்டியே அவர் இவ்வாறு பேசினார்.
;