states

img

தீக்கதிர் உலக முக்கிய செய்திகள்

200 பாலஸ்தீனர்கள் படுகொலை 


இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்துள்ள பாலஸ்தீனத்தில் 2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில் 200 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்  என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளது.

அணுக்கழிவு கலந்த நீர் பாதுகாப்பானதாம்! 

அணுக்கழிவு நீரை ஜப்பான் கடலில் கலந்து விட்ட பின் சீனா அந்நாட்டின் கடல் உணவுப் பொருட்களுக்கு தடை விதித்தது. தற்போது அந்த கடல் நீர் பாதுகாப்பானது என அக்கடல் மீனை உட்கொண்டு ஜப்பானுக்கான அமெரிக்க தூதர் வலிந்து வந்து சான்று தந்துள்ளார்.

சீனா செல்லும் புடின்

மேற்குலக நாடுகள் தூண்டிய உக்ரைன்-ரஷ்யா போருக்கு காரணம் இவர்தான் எனக்கூறி, சர்வதேச குற்ற வியல் நீதிமன்றம் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு கைது ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் பிரிக்ஸ், ஜி-20 என சர்வதேச நிகழ்வு களில் கலந்து கொள்ளாத புடின், பெல்ட் அண்ட் ரோடு மாநாட் டில் கலந்துகொள்ள  அக்டோபர் மாதம் சீனா செல்கிறார்.

பத்து ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் 

சிங்கப்பூரில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. 2017 ஆம் ஆண்டு தேர்தல்நடை பெற்ற போது  மலாய் இனத்தவர் மட்டுமே போட்டியிட வேண்டும் என்ற கடுமை காட்டப்பட்டது. இந்த ஆண்டு நடக்கும் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  தர்மன் சண்முகரத்தினம் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

ஊதிய வெட்டு மற்றும் முறையான ஊதியம் வழங்கா ததை கண்டித்து  இங்கிலாந்தில்  2 லட்சம் மருத்துவர் கள் வேலை நிறுத்தத்திற்கு திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே அந்நாட்டின் இளம் மருத்துவர்கள் 19 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.