சென்னை,பிப்.14- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த கேள்வி நேரத்தின் போது சிதம்பரம் தொகுதி அதிமுக உறுப்பி னர் கே.ஏ.பாண்டியன், “பரங்கிப் பேட்டை ஊராட்சி ஒன்றியம் கொத்தட்டை ஊராட்சியில் உள்ள கூத்தாண்டவர் கோயிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்தப்படுமா? ஆயிரம் ஆண்டுகள் பழமையான எத்தனை கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது? என்றார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு,“ கூத்தாண்டவர் கோவிலில் ரூ.18 லட்சத்து 20 ஆயிரம் செலவில் பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருகிறது. வருகிற ஜூன் மாதம் குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்படும். மாநிலம் முழுவதும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 306 கோவில்கள் கண்டுப்பிடிக்கப் பட்டுள்ளது. அவற்றில் 197 கோவில்கள் குடமுழுக்கு செய்ய நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இதில் 26 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.