நாட்டின் வடமாநிலங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இயல்புக்கு மாறாக 40 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. மொரதாபாத், சம்பல், கன்னோஜ், ராம்பூர், ஹத்ராஸ், பாராபங்கி, காசி கஞ்ச், பிஜ்னோர், அமோரா, பராயிச், லக்னோ உள்ளிட்ட 22 மாவட்டங்கள் கடுமையாக பாதிக் கப்பட்ட நிலையில், கனமழையால் மேற்கூரை இடிந்து விழுந்து, நீரில் மூழ்கி, மின்னல் தாக்கு தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் மாநிலம் முழுவதும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிர தேச மாநிலத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.