புதுதில்லி, மே 10 - உலகப் பணக்காரர் பட்டியலில், அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி 23-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். அதேநேரம் இந்தியாவின் மற்றொரு பணக்காரரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 12-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த நிதி, தரவு மற்றும் ஊடக நிறுவனமான புளூம்பெர்க் அவ்வப்போது, உலகின் பெரும்பணக் காரர்கள் பட்டியலை வெளியிடுவது வழக் கம். அதன்படி மே 8 அன்றும் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்தான் மேற்கண்ட தரவுகள் இடம்பெற்றுள்ளன. ஆர்எஸ்எஸ் - பாஜக-வின் செல்லப்பிள்ளையும், பெரும்பணக்காரரு மான கவுதம் அதானி, கடந்த 2014-இல் உலக பணக்காரர் வரிசையில் 609-ஆவது இடத்தில் இருந்தார். அதன்பிறகு நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு பதவிக்கு வந்த கடந்த 8 ஆண்டுகளில், 2022-இல் உலகின் 2-ஆவது பெரும்பணக்காரர் என்ற இடத் திற்கு முன்னேறினார். வெறும் 8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருந்த அவர், 140 பில்லியன் டாலர் என்ற அசுர வளர்ச்சி கண்டார். சற்று ஏற்ற இறக்கங்களுடன், உலகின் 3-ஆவது இடத்தில் தொடர்ந்து நீடித்து வந்தார். ஆனால், கடந்த ஜனவரி 24 அன்று, அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனம் வெளி யிட்ட 106 பக்கங்களில், 32 ஆயிரம் வார்த்தைகளைக் கொண்ட ஆய்வறிக்கை, அதானி குழும வளர்ச்சி ஊழல் - மோசடிகளால் ஏற்பட்டது என்று பகிரங்க குற்றச்சாட்டை வைத்தது. அதானி குழுமமானது, ரூ. 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவிற்கு பங்குச் சந்தை முறைகேடு செய்திருக் கிறது; அதானி, தனது குடும்ப உற வினர்கள் மூலம் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி, வரி ஏய்ப்பி லும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளார்; அதிகப்படியான வரிச்சலுகை கொண்ட வெளிநாடுகளில் பணத்தை முறையற்ற வகையில் முதலீடு செய்து அமெரிக்கப் பத்திரம் மற்றும் இந்தியர் அல்லாத வர்த்தகப் பத்திரம் மூலம் நிறுவனத்தில் ஷார்ட் பொசி ஷன் (Short Position) வைத்து, தனது நிறு வனங்களின் பங்கு மதிப்பை மோசடியாக உயர்த்திக் காட்டியுள்ளார்” என்று கூறி, அதுதொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டது.
இதனால், அதானி சாம்ராஜ்யம் சீட்டுக் கட்டு சரிவது போல சரிய ஆரம்பித்தது. அந்தச் சரிவு இப்போதும் தொடர்கிறது. இதனால், 2022 டிசம்பரில் சுமார் ரூ. 12 லட்சம் கோடியாக இருந்த கவுதம் அதா னியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு, சுமார் 4 லட்சத்து 68 ஆயிரத்து 120 கோடியாக சரிந்துள்ளது. 2023-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை அதானியின் சொத்து மதிப்பு 63.5 பில்லியன் டாலர் அளவிற்கு குறைந்துள்ளது. தற்போது உலகப் பணக்காரர்கள் பட்டியலில், அதானி 23-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேநேரம் முகேஷ் அம்பானி 7 லட்சத்து 12 ஆயிரத்து 140 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 12-ஆவது இடத்திற்கு சென்று ள்ளார். முகநூலின் தாய் நிறுவனமான மெட்டா-வின் இணை நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கை பின்னுக்குத் தள்ளி யுள்ளார். உலக பணக்காரர்களுக்கான டாப்-5 பட்டியலில் பெர்னார்ட் அர்னால்ட் முதல் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 208 பில்லியன் டாலர்கள் ஆகும். இரண்டாவது இடத்தில் எலான் மஸ்க், மூன்றாவது இடத்தில் ஜெப் பெசோஸ், நான்காவது இடத்தில் பில் கேட்ஸ், ஐந்தாவது இடத்தில் வாரன் பப்பெட் ஆகியோர் உள்ளனர்.