states

12ஆம்வகுப்பு விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

 சென்னை, மே 30- 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல்  பெற்றுக்கொள்ள லாம் என்று அரசுத்  தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள் ளது. இது்குறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளி யிட்ட செய்திக்குறிப்பில், மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை இன்று பிற்பகல்  முதல் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த இணையதளத்தில் சென்று Notification- I Click செய்தவுடன் HSE Second Year Exam, March/April 2023 – Scripts Download” என்ற  வாசகத்தினை “Click” செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியி னைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப் பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்க ளின் நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்கள் இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல் கள் எடுத்து நாளை பிற்பகல் முதல் ஜூன் 3 ஆம் தேதி மாலை 5 மணிவரை  சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வு கள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்ட ணத்தினை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பண மாகச் செலுத்த வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட தென் காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர். கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து, அதற்குரிய கட்டணத் தொகையை பணமாக செலுத்த வேண்டும்.இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.