states

ராஜஸ்தான் : 9 தொகுதிகளில் திணறிய பாஜக உள்ளூர்ப் பிரச்சனைகளால் பின்னடைவு

ஜெய்ப்பூர், ஏப். 27- ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் உள்ளூர்ப் பிரச்சனைகளால் 9 தொகுதி களில் பாஜக திணறியது என்று  ‘எகனாமிக் டைம்ஸ்’ நாளிதழ் செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

ராஜஸ்தானின் 25 தொகுதி களுக்கும் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நிறைவு பெற்றுள்ளது. கடந்த முறை பாஜகவும், அதன் கூட்டணிக்கட்சியும் அனைத்து இடங்களையும் கைப்பற்றின. ஆனால் இந்த முறை அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று எகனாமிக்ஸ் டைம்ஸ் கூறுகிறது. பல்வேறு பிரச்சனைகளால் பின்னுக்குப் போயுள்ள பாஜக, 9 தொகுதிகளில் உள்ளூர்ப் பிரச்சனைக ளால் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளது.

இது குறித்து வெளியாகியுள்ள செய்திக் கட்டுரையில், சுரு, நாகோர், ஜூன்ஜூனு, சிகார்,  தௌசா, கோட்டா, ஜோத்பூர், பார்மெர் , பன்ஸ்வாரா ஆகிய தொகுதிகளைப் பட்டியலிட்டிருக்கிறார்கள். பன்ஸ்வாரா தொகுதியில் பழங்குடி மக்கள் பாஜக மீது பெரும் அதிருப்தி யில் உள்ளனர். அதோடு, அண்மை யில் மக்கள் மத்தியில் ஆதரவு பெற்று வரும் பாரதீய ஆதிவாசிக்கட்சி யுடன் காங்கிரஸ் உடன்பாடு கண்டுள்ளது. இதனால் இந்தத் தொகுதி பாஜகவின் கையில் இருந்து  நழுவுகிறது.

பார்மெர் தொகுதியில் பாஜகவில் சீட் கிடைக்காமல், சுயேச்சையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவீந்தர் பாட்டி, இப்போதும் களத்தில் நிற்கிறார். பாஜகவின் வாக்குகளை இவர் பெரும் அளவில் பிரித்து விடுவார் என்பதால், பாஜக தோற்கும் என்று சொல்லப்படுகிறது. சிகார் தொகுதியில் விவசாயிகள் போராட்ட த்தில் முன்நின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அம்ரா ராம் வெற்றி கிட்டத்தட்ட உறுதியான ஒன்றாக இருக்கிறது.

கள நிலவரம் பாஜகவுக்கு எதிராக இருப்பதையே எகனாமிக் டைம்ஸ்  செய்திக்கட்டுரை வெளிப்படுத்தி யுள்ளது.