states

img

கேரள மீன்வளப் பல்கலை. துணைவேந்தர் நியமனம் ரத்து

கொச்சி, நவ.14- கேரள மீன்வளப் பல்கலைக்கழக (கேயுஎப்ஓஎஸ்) துணை வேந்தர் டாக்டர்.கே.ரிஜி ஜான் நியமனத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.யுஜிசி விதிகளின்படி நியமனம் இல்லை  என சுட்டிக் காட்டப்பட்ட மனுவை ஏற்று உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நியமனத்தை ரத்து செய்தது.உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டாக்டர்.ரிஜி ஜானுக்கு போதிய தகுதிகள் இல்லை என்று கூறி டாக்டர் கே.கே.விஜயன் உயர்நீதிமன்றத்தை அணுகினார்.அவருக்கு பத்தாண்டு பணி அனுபவம் இல்லை என்ற வாதத்தை ஏற்று பணி நியமனத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.ஜன வரி 23, 2021 அன்று கேயுஎப்ஓஎஸ் டீனாக இருந்த டாக்டர் கே.ரிஜி ஜான் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். ரிஜி ஜான் நியமனத்தில் யுஜிசி யின் இரண்டு விதிமுறைகள் மீறப் பட்டுள்ளதாக மனுதாரர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.அதன்படி, ரிஜி ஜான் துணைவேந்தராக தேர்வு செய்யப் பட்டது யுஜிசி பரிந்துரைத்த தேர்வா ணையத்தால் அல்ல என்றும், தேர்வுக் குழுவிடம் ஒருவரது பெயரை மட்டுமே துணைவேந்தருக்கு பரிந்துரைத்து, அந்த நபர் தேர்வு செய்துள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.