கொச்சி, டிச.26- இந்தியாவின் மிகப்பெரிய சோலார் மின்சார படகான இந்திரா-வில் பயணம் செய்து கொச்சியில் உள்ள காயல் களின் அழகை ரசிக்கலாம். இதுகுறித்து கேரள தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ள தாவது: இந்தியாவின் மிகப்பெரிய சோலார் மின்சார படகான இந்திரா இனி கொச்சியில் இயங்க உள்ளது. இந்த இரட்டை அடுக்கு படகு மாநில நீர் போக்குவரத்து துறைக்காக நவால்ட் நிறுவனத்தால் கட்டப்பட்டது. ஒரே நேரத்தில் நூறு பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். கொச்சியின் காயலின் (உப்பங்கழி) அழகை சுற்றுலாப் பயணிகள் ரசிக்க உதவும் வகையில் இந்திராவின் பயணத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேட் இன் கேரளா கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் கேடமரன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்திரா ஆலப்புழா வில் கட்டப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.