states

img

‘கேரள மாதிரி’ யை ஆய்வு செய்ய உத்தரகண்ட் குழு வருகை!

திருவனந்தபுரம், மே 24- கேரளாவில் உள்ள பேரிடர் மேலாண்மை அமைப்பு குறித்து அறிந்து கொள்ள உத்தரகண்ட் அரசின் சிறப்புக் குழு கேரளா வந்துள்ளது. உத்தர கண்ட் அரசின் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல்  செயலாளர் ஆனந்த் ஸ்ரீவஸ் தவா தலைமையிலான உயர்மட்டக் குழு மூன்று நாள் பயணமாக கேரளா வந்தது. கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடு களை ஆய்வு செய்வதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும். முன்னதாக, கேரளா வந்து சேர்ந்த உலக வங்கி  நிபுணர்கள் குழு, பேரிடர் மேலாண்மையிலும் காலநிலை மாற்றத்தைக் குறைப்பதில் மாநிலத்தின் தொலைநோக்கு அணுகு முறையைப் பாராட்டி தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தது.  கேரளாவில் பேரிடர் மேலாண்மை அமைப்புகள், பரவலாக்கப்பட்ட திட்ட மிடலின் கேரளா மாதிரி மற்றும் பேரிடர் மேலாண்மை யில் தலையீடு மற்றும் பேரி டர் தணிப்பு நடவடிக்கைகள் குறித்து மே 23 முதல் 25  வரை மூன்று நாள் நிகழ்வின் போது விரிவாக விவாதிக்கப் படும்.

;