திருவனந்தபுரம், செப்.25- நாட்டிலேயே அதிக இலவச சிகிச்சை அளித்த மாநிலத்திற்கான 2023 ஆம் ஆண்டுக்கான ஆரோக்கிய மந்தன் என்னும் தேசிய விருது கேரளாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் காருண்யா ஆரோக்ய சுரக்சா திட்டம் (காஸ்ப்) மிக உயர்ந்த திட்ட பயன்பாட்டிற்கான விருதைப் பெற்றது. ஏபிபிஎம்ஜேஏஒய்-யின் வருடாந்திர கொண்டாட்டங்கள் தொடர் பாக தேசிய சுகாதார ஆணையத்தின் ஆரோக்கியமந்தன்-2023 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பயனாளி களாக உள்ள பார்வையற்றோருக்கு சிறப்பான சேவைகளை வழங்கி யதற்காக “சிறந்த செயல்பாடுகள்” என்ற பிரிவிலும் கேரளம் விருது பெற்றுள்ளது. தொடர்ந்து மூன்றா வது முறையாக இந்த விருதை கேரளம் வென்றுள்ளது. நிதி நெருக்கடிகள் இருந்தபோதி லும் ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை உறுதி செய்வதற்கான மாநில அரசின் முயற்சிகள் மற்றும் செயல்பாடுகளுக்கு இந்த விருது அங்கீகாரம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார். மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டு களில், சிஏஎஸ்பி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.3,200 கோடிக்கும் அதிகமான இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 13 லட்சம் பய னாளிகள் சிஏஎஸ்பி திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் கடந்த ஆண்டு ஒன்றிய அரசின் பங்காக ரூ.151 கோடி மட்டுமே கேரளத்திற்கு கிடைத்தது. பார்வையற்றோருக்கான சிறப்பு சேவைகள் திட்டம் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் போது தான் ஏற்படுத்தப்பட்டன. இதற்காக அவர்களின் சிகிச்சை அட்டை பிரெய்லி முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, அரசுக்கு சிறப்பு விருதும் கிடைத்தது. சுகாதாரத் துறையின் கீழ் உள்ள மாநில சுகாதார நிறுவனம் மூலம் இத்திட்டம் மாநிலத்தில் செயல்படுத்தப்படுகிறது. அரசு மற்றும் தனியார் துறை களில் 613 பட்டியலிடப்பட்ட மருத்துவ மனைகளில் இருந்து பயனாளி களுக்கு இலவச மருத்துவ சேவைகள் கிடைத்து வருகின்றன.