நாகர்கோவில், ஆக.20- குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் மிகப் பெரிய மலர் சந்தை உள்ளது. இங்கு பெங்களூரில் இருந்தும், ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. தோவா ளையில் சாகுபடியாகும் பூக்கள் உட்பட வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஓணம் பண்டிகை
ஓணம் பண்டிக்கை வருகிற 29 ஆம் தேதி கொண்டாடப்பட இருக் கிறது. ஓணம் பண்டிகை 10 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். வீடுகள் முன்பு அத்தப் பூ கோலமிட்டு பெண்கள் ஓணம் பண்டி கையை வரவேற்பார்கள். ஓணம் பண்டிகை தொடங்கிய நிலையில் பூக்களை வாங்குவதற்கு தென் மாவட்டங்களின் முக்கிய மலர் சந்தை யான தோவாளையில் வியாபாரிகள் குவிந்துள்ளனர்.
புதிய வகை பூக்கள்
தோவாளை பூ சந்தையில் புதிய ரக பூக்கள் விற்பனைக்கு வந்திருக் கின்றன. ஓசூரில் இருந்து டோரா, பமேரி, கோல்டு, அசீஸ், ரூபி, கரிஷ்மா பிங்க், வார்ணி, டுரைஸ் என 8 ரகங்களில் புதிய பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப் பட்டுள்ளன. கேரள வியாபாரிகள் கலர் பூக்களை விரும்பி வாங்கிசென்றனர்.
விலை உயர்வு
தேவை அதிகரித்திருப்பதால் பூக்களின் விலையும் கணிசமாக அதி கரித்துள்ளது. பிச்சி பூ கிலோ ரூ.500- க்கும் மல்லிகை ரூ. 700-க்கும் விற்கப் பட்டது. தோவாளை அரளி ரூ.150, சேலம் அரளி ரூ.150, கோழிப்பூ ரூ.60, மஞ்சள் கேந்தி ரூ.50, சிவப்பு கேந்தி ரூ.60, வாடாமல்லி ரூ.70, செவ்வந்தி ரூ.300, சம்பங்கி ரூ.700, கொழுந்து ரூ.100, மரிக்கொழுந்து ரூ.120-க்கு விற்பனையானது. தாமரை பூவின் விலை கணிச மான அளவு உயர்ந்துள்ளது. ஒரு தாமரைப்பூ 15-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட் களாக பூக்களின் விலை குறைந்து காணப்பட்ட நிலையில் ஞாயிற்றுக் கிழமை சற்று உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர். ஓணம் பண்டிகை மற்றும் சுப முகூர்த்த தினத்தையொட்டி இந்த மாதம் முழுவதும் பூக்கள் விலை வழக்கத்தை விட சற்று உயர்ந்திருக் கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள் ளனர். மேலும் குமரி மாவட்டத்திலும் சில பகுதிகளில் ஓணம் பண்டிகையை யொட்டி தினமும் வீடுகளில் அத்தப்பூ கோலம் போடும் வழக்கம் உள்ளது. பள்ளி, கல்லூரிகளிலும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப் படுவதையடுத்து பூக்கள் வியாபாரம் இன்னும் ஒரு வாரத்திற்கு விலை உயர்ந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.