states

img

மணிப்பூரில் நடப்பது இன அழிப்பு

திருச்சூர், ஆக. 7- ஏழைகள் கொல்லப்படும், பெண் கள் தெருவில் பாலியல் வல்லுறவு செய்யப்படும் நாடாக இந்தியா பாது காப்பற்றதாக மாறி வருகிறது என்றும், மணிப்பூரில் நடப்பது உள்நாட்டுப் போர்  அல்ல, இன அழிப்பு என்றும் எழுத்தா ளர் அருந்ததி ராய் கூறினார். நவமலையாளி கலாச்சார விருதி னை பெற்றுக் கொண்டு உரை யாற்றுகையில் அவர் மேலும் கூறிய தாவது: நாடு பற்றி எரியும் போது முந்தைய  நாள் இரவு உணவிற்கு ரொட்டி சாப்பிட்டேன் என்று பிரதமர் ட்வீட் செய்கிறார். மணிப்பூரைத் தவிர, ஹரி யானாவிலும் ஒரு பிரிவினர் கொல்லப்படுகிறார்கள், விரைவில் கலவரங்கள் ஒவ்வொன்றாக மற்ற மாநிலங்களுக்கும் பரவும். நாடு எரியும் போது, பிரதமர் நரேந்திர மோடி  எங்கே? மக்களுக்காக நிற்காமல் பிரதமர் மௌனம் சாதிப்பதாக அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள். கேரளத்தில் மக்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு மற்ற மாநிலங்களில்  இல்லை என்பது உண்மை.

இணையம் மற்றும் பிற தகவல் தொடர்புகளை துண்டித்து மக்கள் தொடர்ந்து வேட்டையாடப்படும் மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அரசியல் விழிப்புணர்வு மற்றும் அறிவுசார் வளர்ச்சியில் முன்னோடியாக இருக்கும் கேரளாவுக்கு இன்னும்  பல பணிகள் உள்ளன. மணிப்பூருக்கு கேரளா உதவிகளை வழங்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ள னர். ரயிலில் மோடிக்கு ஜே என்று கூறிய படி முஸ்லீம்கள் மீது இந்துத்துவா தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். முஸ்லிமாக இருந்தால் கொல்லப்பட வேண்டும், பெண்ணாக இருந்தால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட வேண்டும் என்பதுதான் அவர்களின் மனோபாவம். உல கத்தின் முன் தலை குனிய வேண்டிய சூழ்நிலையில் நாடு சென்று கொண்டிருக் கிறது. இதற்கு எதிராக நாடு ஒற்றுமை யாக நின்று போராட வேண்டும் என்றும் அருந்ததி ராய் கூறினார். ஒரு லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டுப் பத்திரம் அடங்கிய விரு தினை, டாக்டர் ஜே. தேவிகா, அருந்ததி ராய்க்கு வழங்கினார். இந்த விருதுத் தொகை சமூக மாற்றத்திற்காக செயல்படும் அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என்று அருந்ததிராய் கூறினார். இந்த நிகழ்வுக்கு கவிஞர் பி.என்.கோபிகிருஷ்ணன் தலைமை வகித்தார். நவமலையாளி தலைமை ஆசிரியர் டி.டி.ஸ்ரீகுமார், சமீரா நசீர்,  சோனி வேலுகரன் ஆகியோர்பேசினர்.