ஊர்த் திருவிழாவுக்கு வரும்
தாய் வழி உறவினர்களை
விழுந்து விழுந்து வரவேற்கும்
எங்கள் தாயைப் போலவே
டீச்சர் பரபரப்பாக இருக்கிறார்!
கண்ணூர் விழாக்கோலம் பூண்டது
ரயில் நிலையம் விமான கூடங்களில்
கட்சியின் பொதுச்செயலாளர் முதல்
கடைசி கிளைச் செயலாளர் வரை
வந்துகொண்டே இருக்கிறார்கள்
டீச்சர் ஓடியோடி வரவேற்கிறார்.
சால்வைகளால் ஒரு மரியாதை
சல்யூட்டுகளால் ஒரு மாண்பு
புன்னகையால் ஒரு அன்பு
ஓட்டத்தினூடே ஒரு உபசரிப்பு
வார்த்தைகளிலே ஒரு கனிவு
எங்கள் டீச்சர் ஓடியோடி வரவேற்றார்
டீச்சர் யாரெனத் தெரிகிறதா?
நீங்கள் மறந்திருப்பீர்கள் தானே?!
கொரோனா அரக்கனை
விரட்டி விரட்டி வெளுத்து வாங்கி
சர்வதேச விருதுகளை வென்ற
எங்கள் ஷைலஜா டீச்சர் தான்
மாநாட்டு பிரதிநிதிகளை
ஓடியோடி ஓடோடி வரவேற்கிறார்!
ஷைலஜா டீச்சரா... யாரது?
மீண்டும் அமைச்சர் பதவி தராமல்
அவமதித்து விட்டது சிபிஎம் கட்சியென
பொங்கிப் பொங்கி வாதாடினீர்களே
எங்கள் இனிய நண்பர்களே...
அதே ஷைலஜா... டீச்சர் தான்!
பழி வாங்குது மார்க்சிஸ்ட் கட்சி
பாடாய்ப் படுத்துகிறது சிபிஎம்
இப்படி கற்பனைகளைத் தட்டிவிட்டு
உங்கள் பேனாக்களில் மையூற்றி
"பெருமை" பொங்க ஏதாச்சும்...
எழுதித் தொலையுங்கள்....
- சூர்யா, சென்னை.