states

img

கேரளத்தில் புதிதாக அமையும் பேரிடர் கல்வி உதவி நிதியம்... முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு....

திருவனந்தபுரம்:
கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியத்தின் துணை அங்கமாக கல்வி உதவி நிதியம் அமைக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

‘டிஜிட்டல் கல்வி’ குறித்து பல்வேறு நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்தோர் (பிரவாசி) அமைப்புகள் மற்றும் மக்களவை பிரதிநிதிகளுடன் முதல்வர் பினராயி விஜயன் வெள்ளியன்று காணொளி முறையில் உரையாற்றினார். அப்போது இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: கொரோனா 2-ஆவது அலைப் பரவல் விரைவான வேகத்தில் நிகழ்ந்தது. தொடர்ந்து மூன்றாவது அலை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், குழந்தைகள் உடனடியாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் போகலாம். எனவே, டிஜிட்டல் கல்வி திறமையாக தொடர வேண்டும்.

இதனைக் கருத்தில் கொண்டு, தரமான கல்வி மூலம் அனைத்துப் பள்ளிகளிலும் கல்விசார் சிறப்பை உருவாக்குவதை, அரசாங்கம் தனது நோக்கமாகக் கொண்டுஉள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு குழந்தையின் ஆசிரியர்களும், தங்களின் மாணவக் குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறையை ஆன்லைன் முறைக்கு மாற்றுவர். குழந்தைகளுக்கு அவர்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் கேள்விகள் கேட்கவும் வாய்ப்பு வழங்கப்படும். இணைய இணைப்பில் ஏற்படும் சிக்கல் தீர்க்கப்படும். இதற்கான சாத்தியங்களை சேவை வழங்குநர்களுடனான கலந்துரையாடல்கள் அளிக்கின்றன. விரைவில் டிஜிட்டல் சாதனங்கள், சந்தையில் கிடைப்பதை விட குறைந்த விலையில் கிடைக்க உற்பத்தியாளர்கள் தொடர்பு கொள்ளப்படுவார்கள். இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.பொதுக் கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி, தலைமைச் செயலாளர் டாக்டர் வி.பி.ஜாய், முதல்வரின் முதன்மை செயலாளர் டாக்டர் கே.எம். ஆபிரகாம், நோர்காவின் முதன்மை செயலாளர் கே. இளங்கோவன், ஐ.டி. முதன்மை செயலாளர் பிஷ்வநாத் சின்ஹா உள்ளிட்டோர் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

;