states

img

பெரும் உற்சாகத்துடன் பிரச்சாரம் நிறைவு;

திருவனந்தபுரம், ஏப்.24- 18ஆவது மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டமாக கேரளத்தில் உள்ள  20 தொகுதிகளுக்கான வாக்கெடுப்பு ஏப்ரல் 26 வெள்ளியன்று நடைபெற உள்ளது. கடந்த 40 நாட்களாக சூடு  கிளப்பிய பிரச்சாரம் புதனன்று ‘கொட்டிக் கலாசம்’ என்கிற  பிரச்சார நிறைவு நிகழ்ச்சியாக விழாக்கோலத்துடன் அனைத்து முன்னணிகளும் அந்தந்த தொகுதிகளில் நிறைவு செய்தன.

கேரளத்தில் வலுவான இடது ஜனநாயக முன்னணி ஆதரவு நிலை காண ப்படுகிறது. வியாழனன்று மௌனப் பிரச்சாரம் முடிந்து, வெள்ளியன்று கேர ளம் வாக்குச் சாவடிக்குச் செல்கிறது. மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் உட்பட 194 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  

கடந்த மக்களவைத் தேர்தல் போல் இல்லாமல், அனுபவத்தின் மூலம் இடது சாரிகளின் மேன்மையையும்  அவசியத் தையும் அறிந்து, வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு செல்கின்றனர். மக்களை மூச்சு முட்ட வைக்கும் பாஜக அரசின் கொள்கை கள் மற்றும் அதன் அப்பட்டமான வகுப்பு வாத நிலைப்பாடுகளையும் அதில் காங்கிரஸின் அணுகுமுறைகள் குறித் தும் இத்தேர்தல் பிரச்சாரத்தில் கேரளம் ஆழமாக விவாதித்தது.

ஒன்றிய அமைச்சர்கள் இருவர் (வி. முரளீதரன் - ஆற்றிங்கல், ராஜீவ் சந்திர சேகர் - திருவனந்தபுரம்) போட்டியிடும் திருவனந்தபுரம் மாவட்டத்திலோ அல்லது சுரேஷ் கோபிக்கு மீண்டும் சோத னையான திருச்சூரிலோ கூட பாஜக வால் முன்னேற முடியாது என்ற நிலை  உள்ளது. மதச்சார்பற்ற கேரளம் என்ற  நற்பெயரை நிலைநிறுத்தி வாக்காளர்கள் முன்னேறி வருகின்றனர். கேரளத்தின் மொத்த வாக்காளர்கள் 2.77 கோடி. இதில் 1.43 கோடி பெண்களும், 1.34 கோடி ஆண்களும், 367 திருநங்கைகளும் உள்ளனர்.

இரண்டாம் கட்டமாக   89 தொகுதிகள்
நாட்டின் 89 தொகுதிகளுக்கு இரண் டாம் கட்டமாக வெள்ளியன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. கேரளத்தைத் தவிர, அண்டை மாநிலமான கர்நாடகா வில் 14 தொகுதிகளும், ராஜஸ்தானில் 13 தொகுதிகளும் இதில் உள்ளன. 

இந்த இரண்டாம் கட்டத் தேர்தலில், கேரளம் (20 தொகுதிகள்), ராஜஸ்தான் (13), மகாராஷ்டிரா (08), அசாம் (05), சத்தீஸ்கர் (03), கர்நாடகம் (14), உத்த ரப் பிரதேசம் (08), மத்தியப் பிரதேசம் (07), பீகார் (05), மேற்கு வங்கம் (03), மணிப்பூர் (01), திரிபுரா (01), ஜம்மு-காஷ்மீர் (01) என மொத்தம் 89 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

;