கேரளம் மாநிலம் கோட்டயம் மக்களவைத் தொகுதியின் எல்.டி.எப் வேட்பாளர் தாமஸ் சாழிகடன் தொகுதியில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களுக்கு சென்று பக்தர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் சிவராத்திரி வாழ்த்து தெரிவித்தார். பக்தர்களும் கோவில் நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மகளிர் தினமாகவும் இருந்ததால், பெண்களுக்கு சிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
கேரளம் மாநிலம் இடுக்கி மக்களவைத் தொகுதி இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்.) வேட்பாளர் ஜாய்ஸ் ஜார்ஜ் கொத்தமங்கலம் மலைவாழ் விவசாயிகளின் மனதில் இடம்பிடித்துள்ளார். மகளிர் தினமான வெள்ளியன்று பெண்கள் அதிகம் வேலை செய்யும் நேரியமங்கலம் பண்ணை வயலுக்கு வந்த ஜாய்ஸ்க்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.