states

img

போக்குவரத்தில் கேரளத்தின் புதிய அத்தியாயம்.... தேசிய நீர்வழிப்பாதையை பினராயி திறந்து வைத்தார்....

திருவனந்தபுரம்:
கேரளத்தின் போக்குவரத்து மற்றும்சுற்றுலாவில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில், 520 கி.மீ.தேசிய நீர்வழிப்பாதையின் முதற்கட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அத்துடன், இரண்டாம் கட்டப் பணிகளையும் அவர் தொடங்கி வைத்துள்ளார்.

பினராயி விஜயன் தலைமையிலான எல்டிஎப் அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, போக்குவரத்து துறையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுஉள்ளது. சாலைப் போக்குவரத்தில் மட்டுமல்ல; அந்த மாற்றம் காற்று, நீர் 
போக்குவரத்து துறைகளிலும் பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில், தேசிய நீர்வழிப்பாதை அமைப்பதன் மூலம், புதிய சாத்தியங்களும் திறக்கப்பட்டுஉள்ளன. வடக்கே வங்காளத்தில் இருந்து தெற்கே கோவளம் வரை நீர் போக்குவரத்து வசதிகள் வழங்கப்படுவதால், ஒப்பீட்டளவில் மலிவான பயண முறைகள் கேரளாவில் சாத்தியமாகி வருகின்றன.

கேரள கடற்கரைக்கு இணையாக ஏரிகளையும் ஆறுகளையும் இணைக்கும் தொடர் கால்வாய்களே மேற்கு கடற்கரை கால்வாய் என்று அழைக்கப்படுவதாகும். இதில், கொல்லம் முதல் கோழிக்கோடு மாவட்டத்தில் கல்லாயி வரை 328 கி.மீ. தூரத்திற்கு தேசிய நீர்வழிச்சாலை (என்.எச் -3) உள்ளது. கொல்லம் முதல் கோட்டப்புரம் வரை 168 கி.மீ நீளத்தில் மட்டுமே மத்திய அரசின் நிறுவனமான ஐடபிள்யுஏஎச்செயல்பட்டு வருகிறது. கோட்டாபுரம் முதல் கல்லாயி நதி வரை 160 கி.மீ நீளத்திற்கான வளர்ச்சிப்பணிகள் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் 1200 கி.மீ நீர்வரத்துக் கால்வாய்கள் பல்வேறு மாவட்டங்களில் உள்ளன.பினராயி விஜயன் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தெற்கு மாவட்டங்களிலும் மலபாரிலும் உள்ள கால்வாய்கள், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை நீர் போக்குவரத்திற்காக வகைப்படுத்தவும், கால்வாய் வளர்ச்சியை மூன்று கட்டங்களாக செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டத்தில், தற்போதுள்ள கால்வாய்கள் கிடைக்கக்கூடிய அகலத்திற்கு ஆழப்படுத்தப்பட்டு போக்குவரத்துக்கு தகுந்ததாக மாற்றப்பட்டன. ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை கையகப்படுத்தி கால்வாய்கள் அகலப்படுத்தப்பட்டன. தற்போது, இரண்டாம் கட்டத்தில்தேசிய நீர்வழித் தரத்தில் கால்வாய் கட்டுமானம் 2022-இல் முடிவடையும். மூன்றாம் கட்டமாக மேற்குக் கரை கால்வாய் மற்றும் ஊட்டு கால்வாய்களின் கட்டுமானம் 2025 க்குள் நிறைவடையும்.

;