states

img

புதிய இலச்சினைக்கு ஐஎம்ஏ கேரளம் கண்டனம்

எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்  டணி பெயரால் கலக்கமடைந் துள்ள பாஜக நாட்டின் பெயரை  “பாரத்” என மாற்ற பல்வேறு முயற்சி களை மேற்கொண்டு வரும் நிலையில்,  கடந்த டிசம்பர் 1  அன்று தேசிய மருத்  துவ ஆணையம்  தனது சின்னத்தில் ஆயுர்வேதத்தின் கடவுளாக அறியப்படும் தன்வந்திரியின் (Dhanwantari) புகைப் படத்தை சேர்த்து, மேலும் இந்தியாவுக்குப் பதி லாக “பாரதம்” என மாற்றம் செய்துள்ளது. 

இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய சின்னத்திற்கு  இந்திய மருத்துவக் கூட்டமைப்பின் (ஐஎம்ஏ)  கேரள பிரிவு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐஎம்ஏ கேரளா கூறி யதாவது, “தற்போது வெளியிடப்பட்  டுள்ள தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய இலச்சினை ஏற்றுக் கொள்ள முடி யாதது. நாட்டின் மதச்சார்பற்ற தன்  மைக்கு எதிரானதாகவும், நவீன மருத்துவ  அறிவியலுக்கும் எதிரானதாகவும் உள் ளது. மதத்தில் இருந்து அறிவியல் விலகி யிருக்க வேண்டும் என்பதால் இந்த விவ காரத்தில் உடனடி நடவடிக்கை தேவை”  என கண்டனம் தெரிவித்து தேசிய மருத் துவ ஆணையத்தின் தலைவருக்கு கடித மும் எழுதியுள்ளது ஐஎம்ஏ கேரளா.