states

பஞ்சாயத்து உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

இடுக்கி: பட்டியல் சாதி பிரிவைச் சேர்ந்த சிடிஎஸ் உறுப்பினர் மீது சாதி துஷ்பி ரயோகம் செய்த பஞ்சா யத்து உறுப்பினர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று பட்டியல் சாதி நலக் குழுவின் பகுதிக் குழு வலி யுறுத்தியது. அடிமாலி ஊராட்சி 7 ஆவது வார்டு உறுப்பினர் அனஸ் இப்ராகிமை கைது செய்ய வேண்டும்.  சிடிஎஸ் உறுப்பினர் அம்பலபாடி அக்கம்மா காலனி கோனிக் காபரம்பில் சஜினி விஜ யனை தொடர்ந்து சாதி யைச் சொல்லி கிண்டல் செய் கிறார். சி.டி.எஸ் தேர்தலில் அனஸின் ஆதரவாளரை சஜினி தோற்கடித்ததில் இருந்து, அவர் தொடர்ந்து அவரை அவமதித்து வரு கிறார். கடந்த மார்ச் 4 அன்று  பஞ்சாயத்து டவுன்ஹாலில், அனஸ் சாதி பெயரை சொல்லி திட்டினார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யெனில் கடும் போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி  செயலாளர் எஸ்.முனி யாண்டி தெரிவித்தார்.

;