states

img

ஆலத்தூர் தொகுதியில் கே.ராதாகிருஷ்ணன் வெற்றி

திருவனந்தபுரம், ஜுன் 4-   கேரளத்தில் உள்ள ஆலத்தூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் கே.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

1996 முதல் போட்டியிட்ட ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்ற கே.ராதா கிருஷ்ணன் ஆறாவது முறையாக மக்கள வைத் தேர்தலிலும் வெற்றியை பதிவு செய்தார். யுடிஎப் நாடாளுமன்ற உறுப்பி னர் ரம்யா ஹரிதாஸை இருபதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கே.ராதா கிருஷ்ணன் பின்னுக்குத் தள்ளினார்.

கே.ராதாகிருஷ்ணன் 20106 வாக்கு களை கூடுதலாகப் பெற்றுள்ளார். கே.ராதாகிருஷ்ணன் பெற்ற வாக்குகள் 3,83,473, ரம்யாஹரிதாஸ் 3,63,367 வாக்கு களையும் பாஜகவின் டி.என்.சரசு 1,78,805 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

ஆலத்தூர் மக்களவைத் தொகுதி, 2008 ஆம் ஆண்டு தொகுதி வரையறைக்குப் பிறகு உருவானது. ஆலத்தூர் மக்கள வைத் தொகுதியில் 2008ஆம் ஆண்டுக்கு  முன் ஒற்றப்பாலம் மக்களவைத் தொகு தியின் கீழ் இருந்த பெரும்பாலான பகுதி கள் உள்ளன. கேரளத்தில் உள்ள மக்கள வைத் தொகுதிகளில், ஆலத்தூரும் மாவேலிகரையும் பட்டியல் சாதியின ருக்கு ஒதுக்கப்பட்டவையாகும். ஒற்றப் பாலம் தொகுதியில் இருந்து 1984, 1989 மற்றும் 1991ஆம்  ஆண்டுகளில் நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி  பெற்றார். 1996 தேர்தலில் அஜயகுமார் மூலம் ஒற்றப்பாலம் தொகுதியை மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட் பாளராக போட்டியிட்ட எஸ்.அஜய குமார், தொடர்ந்து 1998, 1999, 2004 தேர்தல் களில் வெற்றி பெற்றார். 2009, 15ஆவது லோக்சபா தேர்தலில், சிபிஎம் தலை வர் பி.கே.பிஜு இடது முன்னணி வேட்பாள ராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014இல் பி.கே.பிஜு மீண்டும் வெற்றி பெற்றார். ஆனால் 2019 தேர்தலில் காங்கிர ஸின் புதிய வேட்பாளரான ரம்யா ஹரி தாஸ் வெற்றி பெற்று நீண்ட நாட்களுக்குப்  பிறகு அந்தத் தொகுதி ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு சாதகமாக அமைந்தது.

2021 சட்டமன்றத் தேர்தலில், ஆலத் தூர் மக்களவைத் தொகுதியில் உள்ள சாலக்கர (கே. ராதாகிருஷ்ணன்), குன்னங் குளம் (ஏசி மொய்தீன்), வடக்கஞ்சேரி (சேவியர் சிட்டிலப்பள்ளி), திரூர் (பிபி சுமோத்), சித்தூர் (கே கிருஷ்ணன் குட்டி), நென்மாரா (கே பாபு), ஆலத்தூர்.  (கே.டி. பிரசேனன்) என இடது ஜனநா யக முன்னணி அனைத்து தொகுதிகளி லும் வெற்றி பெற்றது.