திருவனந்தபுரம், ஜன. 5 - கேரள சட்டப் பேரவையில் நிறை வேற்றப்பட்ட ஜிஎஸ்டி திருத்தச் சட்டத்தில் ஆளுநர் ஆரிப் முகம்மது கான் கையெழுத்திட்டார். இந்த மசோதா ஒரு வாரத்திற்கு முன்பு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப் பட்டது. ஏற்கனவே அனுப்பப்பட்ட பல மசோதாக்களில் கையெழுத்திடாமல் ஆளுநர் வைத்திருந்தார். இந்நிலை யில் அரசு உச்ச நீதிமன்றத்தை அணு கிய நிலையில், ஆளுநர் கான், மசோ தாக்களை உடனடியாக அவற்றை குடி யரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார். இதையொட்டி, உச்சநீதிமன்றம் ஆளுநர் கானுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி யிருந்தது. இந்நிலையில், கடந்த வாரம் அனுப்பப்பட்ட ஜிஎஸ்டி திருத்தச் சட்டத்தில் ஆளுநர் ஆரிப் முகம்மது கான் கையெழுத்திட்டுள்ளார்.