கேரளாவில் பிரபல பின்னணி பாடகர் எடவா பஷீர் மேடையில் பாடிக்கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து மரணமடைந்தார்.
கேரளாவில் உள்ள ஆலப்புழையில் பத்திரப்பள்ளி என்ற இடத்தில் நேற்று இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ப்ளூ டைமண்டஸ் என்ற இசைக்குழுவின் பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு பாடகர் எடவா பஷீர் பாடல்களை பாடிக்கொண்டிருந்தார்.
அப்போது பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பாடிய இந்தியப் பாடல் ஒன்றை மேடையில் நின்று பாடி கொண்டிருந்தபோது யாரும் சற்றும் எதிர்பாராத நேரத்தில் எடவா பஷீர் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக பாடகர் எடவா பஷீரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து பிரபல பாடகர் எடவா பஷீரின் மறைவுக்கு கேரள திரைத்துறையினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.