states

img

கோவிட் அதிகரிப்பதால் கவலை வேண்டாம் கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் பேட்டி

திருவனந்தபுரம், ஜன.23- கோவிட் பாதிப்பு அதிகரித்து வருவதால் அச்சமோ கவலையோ தேவையில்லை என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அனைவருக்கும் சுகாதா ரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே  அரசின் இலக்கு. முழுமையாக மூடப்படு வதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப் படும்.  மாநிலம் முழுவதும் மூடப்பட்டால், அனைத்து மக்களும் நிதி நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். கடைகளை மூடுவதால் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். வாக னங்கள் சாலைக்கு வரவில்லை என்றால், அது அனைவரையும் பாதிக்கும். எனவே,  மக்களை தொந்தரவு செய்யாத அறிவி யல் யுக்தியை கேரளா வகுத்துள்ளது. மாநிலத்தில் தற்போதைய கோவிட் கட்டுப்பாடுகள் மாவட்ட மருத்துவ மனைகளில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டவை என்று கூறினார்.

கோவிட் தடுப்புக்கான அறிவியல் வழி முறைகளை அரசு வகுத்து செயல்படுத்தி யுள்ளது. மூன்றாவது அலையானது கோவிட் நோயின் முதல் மற்றும் இரண்டா வது அலையிலிருந்து வேறுபட்டது. கோவிட் முதல் அலையின் பாதிப்பு தொடங்கிய போது, உலகம் முழுவதும் தெளிவான நெறி முறை இல்லை. அதனால் நாடு முழுவதும் முழு ஊரடங்கை எதிர்கொண்டது. கோவிட் தடுப்பூசி இரண்டாவது அலையின் போது ஜனவரியில் தொடங்கியது. 2021 மே 12, அன்று, கேரளத்தில் அதிகபட்சமாக 43,529 நோய் தொற்று பதிவாகினபோது 20  சதவிகிதம் அளவில் தடுப்பூசிகள் போடப் பட்டிருந்தன. அப்போதிலிருந்து, சிறப்பு தடுப்பூசி இயக்கங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. தற்போது, 18 வயதுக்கு மேற்பட்டவர்க ளுக்கு முதல் டோஸ் தடுப்பூசி 100 சத விகிதம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம், பெரும்பாலான கோவிட் நோயாளிக ளால் எதிர்ப்பு சக்தியைப் பெற முடிந்தது.  

அதனால்தான் கோவிட் வழக்குகள் இப்போது அதிகரித்தபோதிலும், மருத்துவ மனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. தற்போது, மொத்தமுள்ள 1,99,041 கோவிட் நோயாளிகளில், 3 சதவிகிதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.  மருத்துவக் கல்லூரிகளில் ஐசியூவில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. ஒமைக்ரான் மாறுபாடு டெல்டா மாறுபாட்டை விட வேகமாக பரவு கிறது, ஆனால் தீவிரம் குறைவானது. இருப்பினும், வயதானவர்கள், நோய்த் தொற்றுகள் உள்ளவர்கள் மற்றும் தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு இந்த நோய் தீவிரமாக இருக்கலாம். மூன்றாவது அலையை எதிர்கொள்ள ஐசியூ, வென்டிலேட்டர், ஆக்ஸிஜன் மற்றும் குழந்தைகளுக்கான வசதிகளில் பெரிய அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 25 மருத்துவமனைகளில் 194 புதிய ஐசியூ பிரிவுகளும், 19 மருத்துவமனைகளில் 146 எச்டியூ பிரிவுகளும், 10 மருத்துவ மனைகளில் 36 குழந்தைகளுக்கான ஐசியூ பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன.  இது தவிர, சிறப்பு மையத்தின் ஒரு பகுதியாக திருவனந்தபுரம் எஸ்ஏடி மருத்துவமனை மற்றும் எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலா 12 ஐசியூ மற்றும் எச்டியூ படுக்கை கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 400 ஐசியூ மற்றும் எச்டியூ அலகுகள் அமைக் கப்பட்டுள்ளன.

கைக்குழந்தைகள் உள்ளிட்ட குழந்தைக ளுக்கான 99 வென்டிலேட்டர்கள், குழந்தை கள் மற்றும் பெரியவர்களுக்கு 66 வென்டி லேட்டர்கள் உட்பட மொத்தம் 381 புதிய வென்டிலேட்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், 147 ஹை ஃப்ளோ வென்டிலேட்டர் கள் விநியோகம் நடந்து வருகிறது. மருத்து வக் கல்லூரிகளில் 239 ஐசியூக்கள், உயர் பராமரிப்பு படுக்கைகள், 222 வென்டி லேட்டர்கள், 85 குழந்தைகளுக்கான ஐசியூ படுக்கைகள், 51 குழந்தைகளுக்கான வென்டிலேட்டர்கள், 878 ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் 113 சாதாரண படுக்கை கள் உட்பட 1588 புதிய படுக்கைகள் உள்ளன.  திரவ ஆக்ஸிஜனின் சேமிப்புத் திறனும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில் தற்போது 1817.54 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் சேமிப்புத் திறன் உள்ளது. 159.6 மெட்ரிக் டன் கூடுதல் சேமிப்புத் திறன் அமைக்கும் பணி  நடைபெற்று வருகிறது. அனைவரும் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது.

தனிமைப்படுத்தலில் உள்ள மருத்துவர்கள் கூட இ சஞ்சீவனி டெலிமெடிசின் சேவைக்கு முன்வருவது பாராட்டுக்குரியது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் உள்ள ஆர்ஆர்டி மற்றும் வார்டு கமிட்டி உறுப்பினர்கள், ஆர்வலர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஐசிடிஎஸ் பணியாளர்களுக்கு வீட்டு பரா மரிப்பு குறித்து சனியன்று (ஜன.22) பயிற்சி அளிக்கப்படும்.  கோவிட் விதிமுறைகளை அனைவரும் உறுதி செய்ய வேண்டும். தற்போது, மொத்தம் 1,99,041 கோவிட் பாதிக்கபட்டு பராமரிப்பில் உள்ளனர். இதில், 3 சதவிகிதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.

;