states

img

அரியவகை மலேரியா காய்ச்சல் கண்டுபிடிப்பு

கேரளாவில் அரியவகை மலேரியா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. 
கேரளாவில் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் ராணுவ வீரர் ஒருவர் கன்னூர் மாவட்ட மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு பிளாஸ்மோடியம் ஓவல் என்ற அறிய வகை மலேரியா காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 
பாதிக்கப்பட்ட நபர் சூடான் சென்று திரும்பி உள்ளார்.  நோய் அறிகுறி ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டுள்ளதால் நோய் பரவல் தடுக்கப்பட்டுள்ளது. மலேரியா காய்ச்சலுக்குரிய சிகிச்சையே இந்த காய்ச்சலுக்கும் அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.