states

img

கடலும், கடற்கரையும் தனியாருக்கா? - நீதிமன்றம் செல்கிறது கேரள அரசு

திருவனந்தபுரம், ஜுலை 29- கடலையும், கடற்கரையையும் தனி யாருக்குச் சொந்தமாக்கும் மத்திய சுரங்கச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தை அணுகுவதற் கான வாய்ப்பு குறித்து கேரள அரசு ஆலோசனை செய்துள்ளது. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைகள்)  சட்டம், 1957 ஐ திருத்துவதற்கான மத்  திய முடிவை எதிர்த்து கேரளா சட்டப்  பூர்வ வழியை நாடுகிறது. சட்ட வல்லு நர்களிடம் கருத்து கேட்டு ஓராண்டுக்கு முன்பே திருத்தம் குறித்து ஆட்  சேபணை தெரிவித்ததாக தொழில் துறை அமைச்சர் பி.ராஜீவ் தெரிவித்தார். கேரளாவின் கடலோரப் பகுதி களில் கரு மணல் அள்ள அனுமதிக்கும் மாநிலத்தின் அதிகாரத்தை ஒன்றிய அரசு கையகப்படுத்தவும், தனியார் தொழில்முனைவோருக்கு அனுமதி வழங்கவும் இந்தத் திருத்தம் அனு மதிக்கும். தற்போதைய சட்டத்தின்படி  கருமணலில் இருந்து கனிமங்களை பிரித்து எடுக்க பொதுத்துறை நிறு வனங்களை மட்டுமே நியமிக்க முடி யும். இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனங்களில் சுரங்  கத்தை வைத்திருக்கும் கொள்கையில் மாற்றம் ஏற்படும். அணு கனிமச் சுரங்கத்தில் தனி யார்மயமாக்கப்படுவதற்கான தடை களும் நீக்கப்படும். அணுமின் கனிமப் பட்டியலில் இருந்து எட்டு கனிமங் களை நீக்கிவிட்டு தனியாருக்கு சுரங்கம் தோண்டுவதும் தேசிய பாது காப்புக்கு அச்சுறுத்தலாகும். இந்த  சட்டத்திருத்தம் அமல்படுத்தப்பட் டால், மாநில அரசின் அனுமதியின்றி கருப்பு மணல் சுரங்கங்களை தனி யாரிடம் ஒப்படைக்க ஒன்றிய அரசால் முடியும்.

கேரளாவின் மக்கள்தொகை அடர்த்தி மிகுந்த - மிகவும் பாதிக்கப்  படக்கூடிய கடலோர மண்டலத்தை தனியாருக்கு சுரங்கம் அமைக்க கொடுப்பது கடுமையான விளைவு களை ஏற்படுத்தும். மக்களின் பாது காப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு முன்னு ரிமை அளித்து பொதுத்துறை நிறு வனங்கள் தற்போது கட்டுப்படுத்தப் பட்ட சுரங்க அனுமதிகளின் கீழ் செயல்  படுகின்றன. இந்தத் துறையை தனி யாருக்குத் திறந்து விடுவதால், ஆலப்  புழா மற்றும் கொல்லம் மாவட்டங்க ளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். தற்போதைய முறையின்படி, ஒரு  சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப் படும் கனிமங்களில் 50 சதவிகிதத்தை அந்நிறுவனம் பயன்படுத்திய பின் னரே சந்தைப்படுத்த முடியும். நிறு வனத்தின் பயன்பாட்டிற்குப் பிறகு என்  கிற பிரிவைத் தவிர்ப்பது திருத்தங்க ளில் ஒன்றாகும். இது உள்ளிட்ட திருத் தங்கள், மாநில பொதுத்துறை நிறு வனங்களான கேஎம்எம்எல், ஐஆர்  இஎல், டிடிபிஎல் போன்றவற்றின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கும்.

அடிப்படைக் கனிமங்கள் தனியார் ஏகபோகங்களிடம்‌

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த கடல் மற்றும் கடலோர கனி மங்களை தனியார் ஏகபோக நிறு வனங்களுக்கு விற்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. கடலோரப் பகுதி கள் - கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 2002 இல் திருத்தங்களை முன்மொழியும் புதிய மசோதா மக்களவையில் அறிமுகப் படுத்தப்பட்டது. கிராஃபைட், ராக்  பாஸ்பேட், செலினியம், லித்தியம்,  வைரம், தங்கம், டைட்டானியம் போன்  றவற்றை இப்போது தனியார் ஏக போக நிறுவனங்களால் கையாள முடி யும். விண்வெளி, பாதுகாப்பு, எரி சக்தி, தொலைத்தொடர்பு ஆகிய துறை களில் முக்கியமான ஆறு வகையான கனிமங்கள் அணு கனிம பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு தனியாருக்கு சுரங்கம் திறக்கப்படும். பெரிலியம்,  நியோபியம், டைட்டானியம், சிர்கோ னியம் போன்றவை அணு தாதுப்  பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள் ளன. 2002 சட்டத்தின்படி, அடிப்படை கனிமங்கள் மற்றும் மதிப்புக் கூட் டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் உரிமை பொதுத்துறைக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது. இந்த மசோதாவின்படி உரிமம் மூலம் சுரங்கம் தோண்ட தனியாருக்கு அனுமதி அளிக்கப்படும் என்று மத்  திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி  தெரிவித்தார். உரிமம் ஐந்து ஆண்டு களுக்கு இருக்கும். ஆய்வு உரிமம் ஆய்வு மற்றும் உற்பத்திக்கான கூட்டு உரிமம் என இரண்டு கட்டங்களாக உரிமம் வழங்கப்படும். சுரங்கத்தின் செயல்பாடுகள் மூலம் எழும் சுற்றுச்  சூழல் தாக்கத்தை எவ்வாறு குறைக்க லாம் என்பதை மசோதா குறிப்பிட வில்லை.