states

img

சிபிஐ கேரள மாநிலச் செயலாளர் கானம் ராஜேந்திரன் காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் கானம் ராஜேந்திரன் (வயது 73) டிசம்பர் 8 வெள்ளியன்று மாலை காலமானார்.மாரடைப்பு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 2015 முதல் சிபிஐ மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார். 1982 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் கோட்டயம் வாழூர் தொகுதியில் இருந்து சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற (ஏஐஒய்எப்) மாநிலச் செயலாளராகவும் ஏஐடியுசி மாநிலச் செயலாளராகவும் செயல்பட்டவர்.