states

img

பெட்ரோல், டீசல் கொள்ளை விலைக்கு எதிராக 5 லட்சம் மையங்களில் 20 லட்சம் பேர் பங்கேற்பு.... கேரளத்தில் இடதுஜனநாயக முன்னணி வரலாற்றுப் போராட்டம்....

திருவனந்தபுரம்:
ஒன்றிய அரசின் எரிபொருள் கொள்ளையை எதிர்த்து நாட்டில்மிகப்பெரிய வெகுஜன போராட்டத்தை கேரள மக்கள் எல்டிஎப் தலைமையில் நடத்தினர். 5 லட்சம் மையங்களில் 20 லட்சம் பேர் பங்கேற்ற வரலாற்றுப் போராட்டமாக இது மாறியுள்ளது. 

புதனன்று (ஜுன் 30) மாலை 4 மணிக்கு மாநிலம் முழுவதும் இப்போராட்டத்தில் மக்கள் தெருக்கள் தோறும் ஒன்றிய அரசின் கொள்கைக்கு எதிராக பதாகையுடன் முழக்கமிட்டனர்.கோவிட் விதைத்த துன்பங்களை மீறி மக்களை கசக்கிப் பிழியும் பாஜக அரசுக்கு எதிராக நாடு முழுவதும் எழவிருக்கும் போராட்ட அலைகளின் தொடக்கமாக எல்டிஎப் தலைமையில் நடந்த இப்போராட்டம் அமைந்தது. சமூக-கலாச்சார அரங்கில் இருந்து பலரும் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக முன்வந்தனர். உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு அடிப்படையில் மக்கள் கோவிட் கட்டுப்பாடுகளுடன் முழுமையாக பங்கேற்றனர். நான்கு பேர் வீதம் பதாகையுடன் பங்கேற்றனர்.

கோழிக்கோடு எல்.ஐ.சி வளாகத்தில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக எல்டிஎப் தலைமையிலான வெகுஜன போராட்டத்தை தொடங்கி வைத்த மார்க்சிஸ்ட்கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் எளமரம் கரீம், எரிபொருள் விலை உயர்வு மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களையும் கொள்ளையடிக்கும் பணத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு பகிர்ந்தளித்து வருவதாக குற்றம்சாட்டினார். கார்ப்பரேட்டுகளுக்கு ஒன்றிய அரசு 8 சதவிகிதம் சலுகை அளிக்கிறது. இதனால் கருவூலகத்திற்கு ரூ.14 லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் எவ்வாறு செயல்படத் தொடங்கி யிருக்கிறார்கள் என்பதற்கு நான்கு மாநிலங்களில் பாஜகவின் படுதோல்வி ஒரு எடுத்துக்காட்டு என்றும் அவர் சாடினார்.

;