states

img

திருச்சூர் மாவட்டத்தின் 3 தொகுதிகள் எங்கும் எல்டிஎப்புக்கு ஆதரவு நிலை

திருச்சூர், ஏப்.24- கேரளத்தின் திருச்சூர் மாவட்டத் தில் 3 மக்களவைத் தொகுதிகள் உள் ளன. மக்களவைத் தேர்தலில் கடந்த முறை நடந்த தவறை சரி செய்ய திருச்சூர் காத்திருக்கிறது. நாடாளு மன்ற உறுப்பினரை மட்டுமல்ல, மக்கள் மத்தியில் எப்போதும் இருக்கும், அவர்களுடன் இணைந்து பணியாற்றும், நாட்டுக்கு நல்லது செய்யும் தங்கள் பிரதிநிதிகளையே விரும்புகிறார்கள்.

இது எல்.டி.எப்-க்கு ஆதரவான அலைக்கு வாசல் திறந்து வைத்துள்ளது. பிரச்சாரக் களத்தில் முதல் அடி  எடுத்து வைத்த எல்.டி.எப் வேட்பா ளர்கள், ஒவ்வொரு பகுதிகளிலும் மூன்று சுற்று சுற்றுப்பயணத்தை முடித்தனர். திருச்சூரில் முன்னாள் அமைச்சரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான வி.எஸ்.சுனில்குமாரும், ஆலத்தூரில் அமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு  உறுப்பினருமான கே.ராதா கிருஷ்ணனும், சாலக்குடியில் முன் னாள் கல்வி அமைச்சர் சி.ரவீந்திர நாத்தும் எல்.டி.எப்.வேட்பாளர்கள்.

மாநில அரசுக்கு எதிரான எண்ணம் மக்களிடம் இல்லாத நிலையில் பொய்ப் பிரச்சாரம் செய்து எதிர்க்கட்சி களும், பாஜகவும் தேர்தலை சந்திக்கின்றன. மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்கள், மக்கள் நலச் செயல்பாடுகள், வகுப்புவாதத்திற்கு எதிரான நிலைப்பாடு மற்றும் பாசி சத்தை எதிர்த்துப் போராடுவதற்கான முதுகெலும்பாக எல்.டி.எப். உள்ளது.  மக்களை நேரடியாக பாதிக்கும் பிரச்சனைகளை எல்.டி.எப் எழுப்பு கிறது. அதே வேளையில், எதிர்கட்சி களும், பாஜகவும் மக்களை தவறாக வழிநடத்த தேர்தல் பிரச்சாரத்தைப் பயன்படுத்துகின்றன.

கடந்த மக்களவைத் தேர்தலில், மாவட்டத்தில் எல்.டி.எப். 6,38,175 ஓட்டுகள் பெற்றது. யுடிஎப்-க்கு 8,21,892 வாக்குகளும், பாஜகவுக்கு 4,23,192 வாக்குகளும் கிடைத்தன. ஆனால் 2021 சட்டமன்றத் தேர்தலில் எல்.டி.எப்-பின் வாக்குகள் 9,30,539  ஆக அதிகரித்தது. யுடிஎப் வாக்குகள் 6,71,477 ஆக குறைந்தது. மக்களவைத் தேர்தலில், யுடிஎப் 1,83,717 வாக்கு கள் பெரும்பான்மையைப் பெற்றது, சட்டமன்றத் தேர்தலில், எல்டிஎப்  2,59,062 வாக்குகள் பெரும்பான்மை யைப் பெற்றது. இது எல்.டி.எப்-பின் நம்பிக்கையை அதிகரிக்கிறது.

திருச்சூர் பூரம் நெருக்கடியை பயன்படுத்தி வாக்குகளை பெறலாம் என்று பாஜக கணக்கிட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அது அவர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. கடந்த மக்களவைத் தேர்தலை விட, சட்டசபை தேர்தலில், பாஜக, 86,446 ஓட்டுகளை இழந்துள்ளது.  மக்களவையில் 4,23,192 வாக்குகளும், சட்டப் பேரவையில் 3,36,746 வாக்குகளும் பெற்றது. இம்முறை சாதகமான பல்வேறு அம்சங்கள் உள்ளதால் மாவட்டம் முழுவதும் எல்டிஎப் ஆதரவு நிலை உள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.  

;