states

img

எஸ்சி-எஸ்டி ஸ்டார்ட்அப் சிட்டி: முதல் தொகுப்பில் 188 விண்ணப்பங்கள்

திருவனந்தபுரம், அக்.21- பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடி யினத்தைச் சேர்ந்த தொழில் முனை வோரை ஊக்குவிக்கும் ஸ்டார்ட்அப் சிட்டி திட்டத்தின் முதல் தொகுதிக்கு இதுவரை 188 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.      விண்ணப்பதாரர்களில் பெரும்பாலோர் பாரம்பரிய எம்எஸ் எம்இ வணிகம், சுகாதாரம், தகவல் தொழில் நுட்பம், வன்பொருள், ஐஓடி மற்றும் தரவு பகுப்பாய்வு திட்டங்கள் போன்ற முக்கிய துறைகளில் தொழில் முனைவோராக உள்ளனர். அவர்களுக்கான பயிற்சி விரைவில் தொடங்கும். எஸ்சி-எஸ்டி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சிறப்பு செயலாளர் பிரசாந்த் நாயர் கூறியதாவது: ஸ்டார்ட் அப் சிட்டி திட்டத்தின் மூலம், பட்டியல் சாதி மற்றும் பழங்குடி யின இளைஞர்களை தொழில்முனை வோராகவும், முதலாளிகளாகவும் மாற்ற முடியும். விண்ணப்பிப்ப தற்கான இணைப்பு: https://bit.ly/ ksumstartupcity. அடுத்த தொகுதி யில் சேர விருப்பம் உள்ளவர்கள் இப்போதே விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.