states

img

குஜராத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்த ஒப்புதல்!

குஜராத் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று பாஜக தனது  தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. பல்வேறு மதத்தினர் வாழும் இந்த நாட்டில், இச்சட்டம் அரசியல் அமைப்புக்கும், சிறுபான்மையினருக்கும் எதிரானது என பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார். மேலும், இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதலை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக உத்தரகண்ட் மற்றும் இமாசல் பிரதேச அரசுகளும் இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான முடிவை அறிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.