தில்லி, டிச. 26- நாட்டில் கொரோனா பர வல் மீண்டும் வேகமெடுத் துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 412 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.
இதன்மூலம் நாடு முழு வதும் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக் கை 4,170 ஆக அதிகரித்துள் ளது. ஒரே நாளில் கர்நாடகா வில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் கொரோனாவின் புதிய திரிபான ஜேஎன்1 வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 69 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகா ராஷ்டிராவில் 9 பேர் ஜேஎன்1 வகை கொரோனா வைர ஸால் பாதிக்கப்பட்டுள்ள னர்.