states

img

பெங்களூரு பல்கலையில் விநாயகர் கோயில் கட்ட மாணவர்கள் கடும் எதிர்ப்பு

பெங்களூரு பல்கலை வளாகத்தில் விநாயகர் கோயில் கட்ட மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பல்கலை வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. 

கர்நாடக மாநில அரசுக்கு சொந்தமாக நாட்டின் மிகப்பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று பெங்களூரு பல்கலைக்கழகம். 

கடந்த 1886-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்நிலையில் பெங்களூர் பல்கலைக்கழக வளாகத்தில் விநாயகர் கோவில் கட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அங்கு பயிலும்  நூற்றுக்கணக்கான மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம் துணைவேந்தரும், பதிவாளரும் எதிர்ப்பு தெரிவித்ததை கண்டு கொள்ளாத மாநகராட்சி நிர்வாகம் கோயில் கட்டும் பணியை தொடங்கியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

'பல்கலைக்கழகங்கள் கல்வி பயில்வதற்கான ஒரு இடம் மட்டுமே... மதத்தை பின்பற்றுவதற்கான இடம் இல்லை... என்று பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதல்களில் உள்ளது. ஆனால், இதையும் மீறி பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் பல்கலைக்கழகத்தை காவிமயாக்க முயற்சிக்கிறது' என மாணவர்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

;