states

img

கர்நாடகா: மதமாற்ற தடைச் சட்டத்தை நீக்க அமைச்சரவை முடிவு

கர்நாடகாவில் முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டத்தை நீக்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில், கர்நாடகாவில் முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டத்தை நீக்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

மேலும், ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவர் பற்றிய பாடத்தையும் பாடப் புத்தகத்திலிருந்து நீக்கவும், கல்வி நிலையங்களில் இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை வாசிப்பதை கட்டாயமாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 3-ஆம் தேதி தொடங்க இருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.