states

img

கல்லூரி முதல்வரின் கன்னத்தில் அறைந்த கர்நாடகா எம்எல்ஏ!    

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ கல்லூரி முதல்வரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கர்நாடக மாநிலத்தின் மாண்டியா பகுதியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சார்ந்த எம்எல்ஏ ஸ்ரீனிவாஸ், அப்பகுதியில் உள்ள நல்வேதி கிருஷ்ணராஜ வாடியார் ஐடிஐ கல்லூரிக்கு கடந்த 20 ஆம் தேதி ஆய்வுக்குச்  சென்றார்.  

அப்போது கணினி ஆய்வகத்தின் வளர்ச்சிப்பணிகள் குறித்து அந்த கல்லூரியின் முதல்வரிடம் சில கேள்விகள் கேட்டுள்ளார். அதற்கு கல்லூரி முதல்வர் முறையாக பதிலளிக்கவில்லை எனக் கருதிய எம்எல்ஏ, ஒருகட்டத்தில் அனைவரின் முன்பாக அவரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

எம்எல்ஏவின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் எம்எல்ஏ மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.