states

img

கர்நாடக தேர்தலுக்கு முன்பு 385 கிரிமினல் வழக்குகள் ரத்து!

கர்நாடகாவில் தேர்தல் நெருங்கும் தருணத்தில் 2023 ஏப்ரல் வரை 385 கிரிமினல் வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், கர்நாடகாவில் பாஜக தலைமையிலான அரசின் ஆட்சியில், கடந்த ஜூலை 2019 முதல் ஏப்ரல் 2023 வரையிலான  காலகட்டத்தில் 182 வெறுக்கத்தக்க பேச்சு, பசுவின் பெயரால் வன்முறைகள் மற்றும் மதவாத வன்முறை உட்பட 385 கிரிமினல் வழக்குகளை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 1000க்கும் மேற்பட்டோர் கிரிமினல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது: "வெறுப்புரைகள், பசுவின் பெயரால் வன்முறைகள், மதவாத வன்முறைகள் ஆகியவற்றை பா.ஜ.க. அதிகாரபூர்வமாகவே ஊக்கப்படுத்துகிறது. 
தேர்தல் நெருங்கும் தருணத்தில் 2023 ஏப்ரல் வரை 385 கிரிமினல் வழக்குகள் கர்நாடகாவில் ரத்து! மோசமான இத்தகைய மதவாத வாக்கு வங்கி அரசியல் தோற்கடிக்கப்பட வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

;