states

img

கவுரி லங்கேஷ் கொலை குற்றவாளிக்கு ஜாமீன்

கர்நாடக தலைநகர் பெங்களூரில் கடந்த 2017 செப்டம்பர் 5 அன்று பத்திரிகையாளரும், எழுத்தாளருமான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக இந்துத் துவா கும்பலைச்  சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்த நிலையில், 10 ஆயிரம் பக்கத்துக்கு குற்றப்பத்திரிகை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய முக்  கிய குற்றவாளிகளில் ஒருவரான மோகன் நாயக்கிற்கு கர்நாடக உயர்நீதி மன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. 5  ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்  டுள்ள ஜாமீன் கோரும் மனுதாரரிடம் போலீசார் ஏற்கெனவே வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். “விசாரணை தாம தமாகி வருவதை அடிப்படையாகக் கொண்டு மனுதாரர் ஜாமீன் கோரு கிறார். எனவே மனுதாரருக்கு ஜாமீன்  வழங்குகிறது” எனவிசாரணை நீதிபதி உத்த ரவிட்டார். கவுரி லங்கேஷ் கொலை குற்ற வாளிக்கு ஜாமீன் அளித்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.