states

img

கும்பமேளாவை விமர்சிப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்... தொழிலாளர்கள்தான் கொரோனாவை பரப்பினார்கள்...

டேராடூன்:
உத்தரகண்ட்டில் சுமார் 4 ஆண்டுகள் திரிவேந்திர சிங் ராவத் முதல்வராக இருந்தார். இந்நிலையில், அவரை திடீரென ராஜினாமா செய்ய வைத்த பாஜக, தீரத் சிங்ராவத்தை 2021 மார்ச் 10 அன்று முதல்வராக்கியது. இவர் நான்கு மாதம்தான் முதல்வராக இருந்தார். 2021 ஜூலை 4-ஆம்தேதி புஷ்கர் சிங் தாமி என்பவர் முதல்வராகி விட்டார். 

இவர்களில் தீரத் சிங் ராவத் 4 மாதமே முதல்வராக இருந்தாலும், தனது சர்ச்சைப் பேச்சுக்களுக்காக மிகவும் பிரபலமாகி விட்டார். “பகவான் ராமர், கிருஷ்ணரின் அவதாரம்தான் பிரதமர் நரேந்திர மோடி; மக்கள் விரைவில் அவரைக் கடவுளாக ஏற்றுக் கொள்வார்கள்” என்று பேசியதோடு, “பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து முழங்கால் களைக் காட்டுவதால்தான் சமூகம் சீர் கெட்டுப் போகிறது; ஜான்சி ராணிலட்சுமி பாய் போன்றோர் போருக்கே புடவை அணிந்துதான் சென்றார்கள்” என்று புதிய கதைகளை அள்ளி விட்டார். “இந்தியாவை அமெரிக்கா 200 ஆண்டுகள் அடிமைப் படுத்தி வைத்திருந்தது” என்று தனது வரலாற்று அறிவைக் காட்டிப் புல்லரிக்க வைத்ததோடு, “20 குழந்தைகளைப் பெற்றால், அதிக ரேசன்பொருள் பெறலாம்” என்று பேசியும் தனது வாய்க்கொழுப்பை காட்டினார். 

இந்நிலையில், “கொரோனா இரண்டாம் அலை பாதிப்பிற்கு கும்பமேளாவை குற்றம்சாட்டுபவர்கள் தேசவிரோதிகள்” என்று பதவிபறிபோன பின்பும் திமிராகப் பேசியுள்ளார். ஒரு சிலர் தொடர்ந்து நாட்டிற்கு எதிராகவும், இந்துத்துவத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள ராவத், புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பியதே கொரோனா பரவலுக்கு காரணம் எனவும் பழியைத் தூக்கிப் போட்டுள்ளார்.கும்பமேளா நடத்தினால், கொரோனா பரவிவிடுமே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ‘ஹரித்துவார் நகரில் கங்காதேவி ஆறாக ஓடுகிறார். கொரோனாவில் இருந்து அவர் எங்களை காப்பாற்றுவார்’ என்று கூறியவர்தான் தீரத் சிங் ராவத் என்பது குறிப்பிடத்தக்கது.

;