india

img

ராமர், கிருஷ்ணரின் அவதாரமே பிரதமர் நரேந்திர மோடி... உத்தர்கண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் சொல்கிறார்...

டேராடூன்:
உத்தரகண்டில் பாஜக ஆட்சிநடைபெறுகிறது. ஊழல் முறைகேடு, உட்கட்சி பூசல் காரணமாக அந்த மாநில முதல்வராக பதவி வகித்த திரிவேந்திர சிங் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் கடந்த மார்ச் 10 அன்று பதவியேற்றார்.இதையடுத்து, ஹரித்துவாரில் நடைபெற்ற கும்பமேளா விழாவில் பேசிய தீரத் சிங் ராவத், “பிரதமர் நரேந்திர மோடிமக்களுக்காக பணியாற்றி வருகிறார். அவரோடு இணைந்து புகைப்படம் எடுத்து கொள்ள உலக தலைவர்களே ஆர்வம்காட்டுகின்றனர். அவர் நினைத் தால் எதையும் சாதிப்பார். பகவான் ராமர், கிருஷ்ணரின் அவதாரமாக பிரதமர் நரேந்திர மோடியை மக்கள் ஏற்றுக் கொள்வார் கள். அந்த காலம் வெகு தொலைவில் இல்லை” என்று மோடியே வெட்கப்படும் அளவுக்கு துதி பாடியுள்ளார்.

இது காங்கிரஸ், சமாஜ்வாதிகட்சி போன்ற எதிர்க்கட்சியினருக்கு மட்டுமன்றி பாஜக-வைச்சேர்ந்தவர்களுக்கு உள்ளேயேஅதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “அவரவர் கட்சியின் தலைவருக்கு புகழாரம் சூட்டுவது தவறில்லை. ஆனால் ஒரு மனிதரைகடவுளுக்கு நிகராக ஒப்பிடுவது,சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை புதிய முதல்வர் புரிந்து கொள்வார் என நம்புகிறேன்” என்று காங்கிரஸ் மூத்ததலைவரும் உத்தரகண்ட் முன் னாள் முதல்வருமான ஹரீஷ் ராவத் விமர்சித்துள்ளார்.

அதேபோல சமாஜ்வாதி செய்தித் தொடர்பாளர் சுனில் யாதவ் அளித்துள்ள பேட்டியில், “குஜராத் மைதானத்துக்கு ஏற்கெனவே மோடியின் பெயர் சூட்டப்பட்டுவிட்டது. அடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் பெயரால் அயோத்தியில் புதியகோயில் கட்டுவதுதான் பாஜக-வின் திட்டமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

;