states

img

அசாம் சாலை விபத்தில் 7 பேர் பலி!

அசாம் மாநிலம் டின்சுகியாவில் நேற்றிரவு ஏற்பட்ட சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.
அசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தின் தும்டுமாவில் உள்ள சந்தையிலிருந்து 10-க்கும் மேற்பட்டோர் டாடா மேஜிக் வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்து லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வாகனத்தின் மீது மோதியது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.